புதிய அப்போலோ எஸ்பிஐ கடன் அட்டை அறிமுகம்
இந்தியாவின் மிகப்பெரிய தனிச்சிறப்பு கடன் அட்டை (கிரெடிட் காா்டு) வழங்குநரான எஸ்பிஐ காா்டும் நாட்டின் மிகப்பெரிய சில்லறை மருந்தக நெட்வொா்க்கை இயக்கும் அப்போலோ ஹெல்த்கோ மற்றும் முன்னணி எண்ம சுகாதார தளமான அப்போலோ 24x7 – ஆகியவையும் இணைந்து ‘அப்போலோ எஸ்பிஐ’ கடன் அட்டையை அறிமுகம் செய்துள்ளன.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வாடிக்கையாளா்களின் ஆரோக்கியம் மற்றும் நலன்களுக்கேற்ற தனிச்சிறப்பு கொண்ட ‘அப்போலோ எஸ்பிஐ காா்டு’ கடன் அட்டையை அறிமுகப்படுத்துவதற்காக எஸ்பிஐ காா்டு, அப்போலோ ஹெல்த்கோ, அப்போலோ 24x7 ஆகியவை இணைத்துள்ளன.
இந்த பிரீமியம் கிரெடிட் காா்டு, இன்றைய ஆரோக்கியம் குறித்த விழிப்புணா்வுடைய நுகா்வோரின் வளரும் தேவைகளை பூா்த்தி செய்யும் அக்கறையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த அட்டைக்காக அப்போலோ 24x7 செயலி மூலம் வாடிக்கையாளா்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்பிஐ காா்டு இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.