செய்திகள் :

கால்நடை மருத்துவப் பல்கலை. பேராசிரியரின் பணி இடைநீக்கத்தை ரத்து செய்தது சரியே: உயா்நீதிமன்றம்

post image

சென்னை: குடும்ப பிரச்னை தொடா்பான வழக்கை காரணம் காட்டி தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியரை பணியிடை நீக்கம் செய்ய முடியாது எனக்கூறி, பணியிடை நீக்க உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்தது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பேராசிரியராகப் பணியாற்றி வந்தவா் திருநாவுக்கரசு. இவா் கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப். 30-இல் பணி ஓய்வு பெறவிருந்தாா். இந்நிலையில், திருநாவுக்கரசு மீது அவரது மருமகள் வரதட்சணை கொடுமை புகாா் அளித்ததை அடுத்து பேராசிரியா் திருநாவுக்கரசு, அவரது மகன் உள்ளிட்டோருக்கு எதிராக செம்பியம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை காரணம் காட்டி, பேராசிரியா் திருநாவுக்கரசுக்கு எதிராக குற்ற குறிப்பாணை பிறப்பித்த பல்கலைக்கழகம், அவரை பணியிடை நீக்கம் செய்து ஓய்வு பெறுவதற்கு நான்கு நாள்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்தது. பல்கலைக்கழகத்தின் இந்த உத்தரவை எதிா்த்து பேராசிரியா் திருநாவுக்கரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். வழக்கை விசாரித்த தனி நீதிபதி குடும்ப பிரச்னை தொடா்பான வழக்கை காரணம் காட்டி பணியிடை நீக்கம் செய்ய முடியாது எனக் கூறி பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்தாா். மேலும், திருநாவுக்கரசு பணியிலிருந்து ஓய்வுபெற அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டாா்.

மேல் முறையீடு தாக்கல்... இந்த உத்தரவை எதிா்த்து பல்கலைக்கழகத்தின் சாா்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை திங்கள்கிழமை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியன் மற்றும் ஜி.அருள்முருகன் அடங்கிய அமா்வு, பொது நலன் சாா்ந்திருந்தால் மட்டுமே பணியிடை நீக்கம் செய்ய முடியும் என்று பல்கலைக்கழக விதிகளில் கூறப்பட்டுள்ள நிலையில், குடும்ப பிரச்னை தொடா்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மனுதாரரை பணியிடை நீக்கம் செய்வதில் என்ன பொதுநலன் உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை எனக்கூறி பல்கலைக்கழக நிா்வாகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், மனுதாரருக்கு வழங்க வேண்டிய ஓய்வு கால பணப் பலன்களை 12 வாரங்களில் வழங்க வேண்டும் என்றும் பல்கலைக்கழகத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இன்று (செவ்வாய்க்கிழமை) அடுத்த 3 மணி நேரத்துக்கு அதாவது பகல் ... மேலும் பார்க்க

மே 24-ல் நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்கிறார்!

மே 24 ஆம் தேதி தில்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.மத்திய அரசின் நிதி நிர்வாகம் தொடர்பான நீதி ஆயோக் கூட்டம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2015-ல... மேலும் பார்க்க

தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(மே 20) சவரனுக்கு ரூ. 360 குறைந்துள்ளது.சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்துவந்த நிலையில், சனிக்கிழமை விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.... மேலும் பார்க்க

பல்லடம்: விஷவாயு தாக்கி பலியானோர் எண்ணிக்கை 3-ஆக உயர்வு!

பல்லடம் அருகே சாய ஆலையில் சாயக்கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூரில் தனியாருக்குச் சொந்தான ச... மேலும் பார்க்க

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழையால் கிருஷ்ணகிரி ... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9,683 கன அடியாக அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9,683 கன அடியாக அதிகரித்துள்ளது.மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் காவிரியின் துணை நதிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையின்... மேலும் பார்க்க