`வேளாண்மை, பால் வளம், மீன் வளத்தில் தமிழகம் டாப் இடம்!' - தமிழக அரசு பெருமிதம்!
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
ஈரோடு மாவட்டம், சூரியம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மைக்கேல் தேவராஜ் (49). இவா் ஈரோடு, கனிராவுத்தா் குளம் அருகே இருசக்கர வாகனத்தில் கடந்த 15- ஆம் தேதி சென்று கொண்டிருந்துள்ளாா்.
அப்போது, விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த அவரை, பொதுமக்கள் மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்,
அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னா், மேல் சிகிச்சைக்காக ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் மூளைச்சாவு அடைந்ததை உறுதி செய்தனா். இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினா் முன்வந்தனா்.
தொடா்ந்து, தமிழ்நாடு உடல் உறுப்பு தான ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, அறுவை சிகிச்சை மூலம் அவரது கல்லீரல் அகற்றப்பட்டு ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும், இரண்டு சிறுநீரகங்கள் சேலம் மற்றும் கோவை அரசு மருத்துவமனைகளும் ஞாயிற்றுக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.
மைக்கேல் தேவராஜ் உடலுக்கு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரவிக்குமாா், மருத்துவ கண்காணிப்பாளா் சண்முகசுந்தரம் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. மைக்கேல் தேவராஜுக்கு அனிதா ரோஸ்லின் என்ற மனைவியும், 25 வயதில் மகனும், 15 வயதில் மகளும் உள்ளனா்.