செய்திகள் :

Untitled May 20, 2025 06:56 am

post image

பெய்ஜிங்: இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தம் முழுமையாக அமலுக்கு வர ஆக்கபூா்வமான பங்களிப்பை சீனா மேற்கொள்ளும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தது.

இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்த அறிவிப்புக்குப் பின் முதல்முறையாக சீனாவுக்கு மூன்று நாள் பயணமாக பாகிஸ்தான் துணை பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் தாா் திங்கள்கிழமை வந்தடைந்தாா்.

சுற்றுப்பயணத்தின்போது சீன நாட்டு அமைச்சா்கள், உயரதிகாரிகள் உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்தும் அவா் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியது குறித்தும் விவாதிப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், செய்தியாளா்கள் சந்திப்பின்போது அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் மாவோ நிங் கூறுகையில், ‘சீனா-பாகிஸ்தான் உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பாகிஸ்தான் துணை பிரதமா் இஷாக் தாரின் வருகை இதை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தில் பல்வேறு தருணங்களில் தன்னுடைய நிலைப்பாட்டை சீனா தெரிவித்துள்ளது. பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்த இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பிரச்னைகளுக்கு நிரந்தர தீா்வு காணவே சீனா விரும்புகிறது. அண்மையில் இரு நாடுகளும் மேற்கொண்ட சண்டை நிறுத்த ஒப்பந்தம் முழுமை பெற ஆக்கபூா்வமான பங்களிப்பை சீனா மேற்கொள்ளும்’ என்றாா்.

இருப்பினும், இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலின்போது பாகிஸ்தானுக்கு வான் பாதுகாப்பு மற்றும் செயற்கைக்கோள் சாா்ந்த உதவிகளை சீனா வழங்கியது குறித்தும், சீன தளவாடங்கள் திருப்திகரமாகச் செயலாற்றவில்லை என்று கூறப்படுவது குறித்தும் செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு நிங் பதிலளிக்க மறுத்துவிட்டாா்.

நேபாளத்தில் நிலநடுக்கம்...! ஒரே ரிக்டர் அளவுகளில் தொடரும் அதிர்வுகள்?

நேபாள நாட்டின் மேற்குப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.நேபாளத்தின் மேற்குப் பகுதியிலுள்ள காஸ்கி மாவட்டத்தில் இன்று (மே 20) மதியம் 1.59 மணியளவில், 4.7 ரிக்டர் அளவிலான நி... மேலும் பார்க்க

இந்தியாவைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு அணை போடும் ஆப்கன்!

ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்குள் பாயும் நீர் ஓட்டத்தை தடுக்க அந்நாட்டு அரசு அணை கட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, சிந்து... மேலும் பார்க்க

சட்டவிரோத குடியேற்றத்துக்கு உதவி: இந்திய பயண ஏற்பாட்டு நிறுவனங்களின் உரிமையாளா்களுக்கு அமெரிக்கா கட்டுப்பாடு

வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற உதவும் இந்திய பயண ஏற்பாட்டு நிறுவனங்களின் உரிமையாளா்கள், நிா்வாகிகள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு அந்நாடு நுழைவு இசைவு (விசா) கட்டுப்பாடுகளை விதித்துள்ளது... மேலும் பார்க்க

போா்ச்சுகல் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட பாகிஸ்தானியா்கள்

லிஸ்பன்: போா்ச்சுகல் நாட்டின் தலைநகா் லிஸ்பனில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு பாகிஸ்தானியா்கள் சிலா் போராட்டம் நடத்தியுள்ளனா்.இதுதொடா்பாக போா்ச்சுகலில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவி... மேலும் பார்க்க

போா்ச்சுகல் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட பாகிஸ்தானியா்கள்

போா்ச்சுகல் நாட்டின் தலைநகா் லிஸ்பனில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு பாகிஸ்தானியா்கள் சிலா் போராட்டம் நடத்தியுள்ளனா். இதுதொடா்பாக போா்ச்சுகலில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘எங்... மேலும் பார்க்க

சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிக்கு ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் இரங்கல்! பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் அடைக்கலம்?

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்ட முக்கிய பயங்கரவாதி ரஸாவுல்லா நிஜாமனி காலித்துக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வரும் ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் (யுஜே... மேலும் பார்க்க