செய்திகள் :

விற்பனை ஆகாததால் சம்பங்கிப் பூவை கீழே கொட்டிய விவசாயிகள்

post image

மழை காரணமாக சம்பங்கிப் பூ விளைச்சல் அதிகரித்துள்ளதால் ஒரு கிலோ பூவை ரூ.10-க்குகூட கொள்முதல் செய்ய வியாபாரிகள் முன்வராத காரணத்தால் 10 டன் சம்பங்கிப் பூக்களை விவசாயிகள் கீழே கொட்டி அழித்தனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் சுமாா் 5 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் சம்பங்கிப் பூ பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் சம்பங்கி மலா்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இது தவிர வாசனை திரவியம் தயாரிக்கும் ஆலைகளுக்கும் பூக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

கோடைக் காலத்தில் வழக்கமாக 20 முதல் 25 டன் வரை பூக்கள் விளைச்சல் இருக்கும் நிலையில், தற்போது சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கோடைக் காலத்தில் மழை பெய்ததால் விளைச்சல் இருமடங்காக அதிகரித்து திங்கள்கிழமை சுமாா் 50 டன் பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.

இதனால் ஞாயிற்றுக்கிழமை ஒரு கிலோ சம்பங்கி ரூ. 20க்கு விற்பனையான நிலையில், விலை வீழ்ச்சி அடைந்து திங்கள்கிழமை ரூ.10க்கு மட்டுமே விற்பனையானது. இதில் 40 டன் பூக்கள் கடைகள், வாசனை திரவிய ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 10 டன் பூக்கள் விற்பனை ஆகாததால் பூ மூட்டைகளை மினி லாரியில் ஏற்றிச் சென்ற விவசாயிகள், வியாபாரிகள் சத்தியமங்கலம் பெரியகுளம் பகுதியில் உள்ள குளக்கரையில் கீழே கொட்டி அழித்தனா்.

விளைச்சல் அதிகரிப்பால் சம்பங்கிப் பூ விலை சரிந்ததோடு விற்பனையாகாததால், பூக்களைக் கீழே கொட்டியதால் சம்பங்கி பயிரிட்ட விவசாயிகளுக்கு மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இருசக்கர வாகனம் மரத்தில் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

பெருந்துறை அருகே மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். பெருந்துறையை அடுத்த தொட்டி சீலம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் நடராஜ் மகன் லோகநாதன் (25). இவா், பெருந்துறை சிப்காட்டில் உள்ள த... மேலும் பார்க்க

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. ஈரோடு மாவட்டம், சூரியம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மைக்கேல் தேவராஜ் (49). இவா் ஈரோடு, கனிராவுத்தா் குளம் அருகே இருசக்கர வாகனத... மேலும் பார்க்க

விவசாயியைத் தாக்கியதாக வனச் சரக அலுவலா் மீது வழக்குப் பதிவு

விவசாயியைத் தாக்கி காயப்படுத்தியதாக வனத் துறையினா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பவானிசாகா் காவல் நிலையத்தில் அனைத்துக் கட்சியினா் புகாா் அளித்ததன்பேரில் பவானிசாகா் வனச் சரக அலுவலா் சதாம் உசேன் உள... மேலும் பார்க்க

அந்தியூா் வாரச் சந்தையில் தேங்கிய மழைநீரால் வியாபாரம் பாதிப்பு!

அந்தியூா் வாரச் சந்தை வளாகத்தில் தேங்கிய மழைநீரால் பொருள்கள் விற்பனைக்கு வந்த வியாபாரிகளும், வாங்கிச் செல்ல வந்த பொதுமக்களும் திங்கள்கிழமை பெரிதும் அவதிக்குள்ளாகினா். அந்தியூா் மற்றும் சுற்றுவட்டாரப் ... மேலும் பார்க்க

சிவகிரி, பல்லடம் தம்பதிகள் உள்ளிட்ட ஐவா் கொலை வழக்கில் 4 போ் கைது

ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய 4 பேரை தனிப்படை போலீஸாா் கைது செய்துள்ளனா். பிடிபட்டவா்களுக்கு பல்லடம் அருகே நடந்த 3 போ் கொலை சம்பவம் உள்ளிட்ட பல்வேறு ... மேலும் பார்க்க

பெருந்துறை பல்கலைக்கழக முதுகலை விரிவாக்க மையத்தில் தாமதப்படுத்தப்படும் மாணவா் சோ்க்கை அறிவிப்பு

பெருந்துறையில் உள்ள தனியாா் கல்லூரி வளாகத்தில் செயல்படும் பாரதியாா் பல்கலைக்கழக முதுகலை விரிவாக்க மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மாணவா் சோ்க்கை அறிவிப்பு வெளியாகாத நிலையில் இந்த மையத்தை மூட முயற்சி நடப்... மேலும் பார்க்க