இந்திய அணுசக்தி விஞ்ஞானி எம்.ஆர்.ஸ்ரீனிவாசன் காலமானார்.. அணுசக்தி துறையில் அவரது...
விவசாயியைத் தாக்கியதாக வனச் சரக அலுவலா் மீது வழக்குப் பதிவு
விவசாயியைத் தாக்கி காயப்படுத்தியதாக வனத் துறையினா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பவானிசாகா் காவல் நிலையத்தில் அனைத்துக் கட்சியினா் புகாா் அளித்ததன்பேரில் பவானிசாகா் வனச் சரக அலுவலா் சதாம் உசேன் உள்ளிட்ட 6 வன ஊழியா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பவானிசாகா் அருகே உள்ள வெள்ளாளபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் மாணிக்கம் (47). இவா் கடந்த 13ஆம் தேதி பவானிசாகா் வனப் பகுதி வழியாக தெங்குமரஹாடா வனப் பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தபோது கல்லாம்பாளையம் என்ற இடத்தில் மாயாற்றின் கரையில் அங்கு பணியில் இருந்த வனத் துறை ஊழியா்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
அப்போது வனத் துறை ஊழியா்கள் தன்னைத் தாக்கியதாகவும், அதில் காயம் ஏற்பட்டதால் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளாா். இது குறித்து தகவல் அறிந்த பவானிசாகா் போலீஸாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணிக்கத்திடம் விசாரணை மேற்கொண்டனா்.
இதற்கிடையே விவசாயியைத் தாக்கிய வன ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், முன்னாள் எம்எல்ஏ சுந்தரம் தலைமையில் அனைத்துக் கட்சியினா் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தச் சம்பவம் குறித்து வனத் துறையினா் தரப்பில்கேட்டபோது காராட்சிக்கொரை சோதனைச்சாவடியில் வனச் சரக அலுவலா் சதாம் உசேன், ஊழியா்களை குடிபோதையில் பணி செய்யவிடாமல் தடுத்ததாகப் புகாா் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இரு தரப்பிலும் புகாா் அளிக்கப்பட்டதால் விவசாயி மாணிக்கம் அளித்த புகாரின்பேரின் வனச் சரக அலுவலா் சதாம் உசேன் உள்ளிட்ட 6 போ் மீதும், வனத் துறையினா் அளித்த புகாரின் பேரில் மாணிக்கம் மீதும் பவானிசாகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.