செய்திகள் :

Health: நாம் ஏன் மைக்ரோ கிரீன்ஸ் சாப்பிட வேண்டும்?

post image

ற்போது மக்களிடம் மைக்ரோ கிரீன்ஸ் சாப்பிடும் பழக்கம் பிரபலமாகி வருகிறது. எளிமையாக வீட்டிலேயே விளைவித்துகூட இதை சாப்பிடலாம். அப்படிப்பட்ட ஊட்டச்சத்து நிறைந்த மைக்ரோ கிரீன்ஸ் யார் சாப்பிடலாம், எப்படி வீட்டிலேயே விளைவிப்பது குறித்து விளக்கம் தருகிறார் சென்னையைச் சேர்ந்த உணவியல் நிபுணர் உமாசக்தி.

மைக்ரோ கிரீன்ஸ்
மெகா ஆற்றல் தரும் மைக்ரோ கீரைகள்!

வீடுகளுக்கு உள்ளேயே எளிய முறையில் தானியங்கள், கீரைகள் மற்றும் காய்கறிகளின் விதைகளில் இருந்து முளைத்த சிறு செடியைத்தான் மைக்ரோ கிரீன் என்கிறோம். விதைகளைப் பயிரிட்டு வளர்ப்பதைத்தான் மைக்ரோகிரீன்ஸ் முறை என்கிறோம். முழு தானியங்களை முளைக்கட்டி எடுத்துக்கொள்வதை போல், தானியங்களை விதைத்து, விதை முளைத்த 7 நாள்களுக்குள் அறுவடை செய்து சாப்பிடலாம். இதே முறையில் பயிர் செய்யப்பட்ட கீரைகள் மற்றும் காய்கறிச்செடிகளின் நாற்றுகளில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.

இந்த மைக்ரோ கிரீனில் வைட்டமின் A,C,K நிறைந்துள்ளன. தவிர பாலிஃபீனால் போன்ற ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸும் மைக்ரோ கிரீனில் இருக்கிறது.

100 கிராம் மைக்ரோ கிரீனில் 15-20 கலோரி தான் உள்ளது. இதில் கார்போஹைட்ரேட் அளவு குறைவாக உள்ளது தான் இதற்கு காரணம்.

வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ் அளவு அதிகமாக இருக்கிறது.

உணவியல் நிபுணர் உமாசக்தி
உணவியல் நிபுணர் உமாசக்தி

விதை முளைத்த இரண்டு நாள்களில், அதன் முளை வெளிவரும்போதே பயன்படுத்துவது முளைக்கட்டியப் பயறு. இன்னும் சில நாள்கள் வைத்து அதன் முளை தண்டிலிருந்து இலை வெளியே வந்த சில நாட்களில் பயன்படுத்துவதுதான் மைக்ரோ கிரீன்ஸ்!

எல்லோரும் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகளில் ஒன்று தான் இது. கொலஸ்டிரால், டயாபடீஸ், இதயம் சார்ந்த நோய் உள்ளவர்கள் எல்லாம் இதை எடுத்துக்கொள்வது நல்லது. உடல் எடை குறைப்பதற்கு இது உதவியாக இருக்கும். விளைவித்த மைக்ரோ கிரீன்ஸை அதன் தண்டுப்பகுதி வரை எடுத்து பயன்படுத்தலாம். வேர்ப்பகுதியை பயன்படுத்தக்கூடாது. அது மண்ணுக்குள் இருப்பதால் அதை பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது.

வீட்டில் எப்படி வளர்க்கலாம்? ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிதளவு மண் அல்லது டிஸ்யூ பேப்பர் போட்டு, அதில் முளைக்கட்டிய விதைகள் அல்லது விதைகளை அப்படியே போட்டு 5 முதல் 7 நாட்கள் வரை வீட்டிற்குள் வைத்திருந்தாலே மைக்ரோ க்ரீன்ஸ் முளைத்துவிடும். இதை பறித்து சாண்ட்விச், சாலட், பொரியல் என்று விதவிதமாக சாப்பிடலாம்.

கடுகு, பெருஞ்சீரகம், வெந்தயம், கோதுமை போன்ற நம்முடைய காலநிலைக்கு ஏற்ப முளைக்கும் விதைகளை நாம் மைக்ரோ கிரீன்ஸ் ஆக விளைவிக்கலாம். எளிதில் செரிமானமாகக்கூடிய உணவுதான் என்பதால், அனைவரும் கட்டாயம் எடுத்துக்கொள்ளலாம்'' என்கிறார் உணவியல் நிபுணர் உமா சக்தி.

அரிய வகை நோயுடன் போராடிய குழந்தை; மரபணு திருத்தச் சிகிச்சையால் காப்பாற்றிய அமெரிக்க மருத்துவர்கள்

கைல் - நிகோல் என்ற அமெரிக்கத் தம்பதிக்குப் பிறந்த குழந்தைக்கு மிக மிகத் தீவிரமான பிரச்னை கண்டறியப்பட்டது.13 லட்சம் குழந்தைகளில் ஒருவருக்கு வரும் CSP1 குறைபாடு என்ற அந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்... மேலும் பார்க்க

Health: உணவை நொறுங்கத் தின்றால் 100 வயது வாழலாமா? டயட்டீஷியன் சொல்வது என்ன?

'பசித்துப் புசி, ருசித்துப் புசி’ என்று சொன்னது எல்லாம் வெறும் வார்த்தைகளாக மாறிவிட்ட அவசர உலகம் இது. அவசர அவசரமாய் நாலு வாய் அள்ளிப்போட்டுக் கொண்டு அடுத்த வேலைக்குச் செல்லும் இயந்திர வாழ்வில் இரவு உண... மேலும் பார்க்க

Health: பிடித்த சுவை சொல்லி விடும் உங்கள் உடலில் இருக்கிற சத்துக்குறைபாட்டை..!

''ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சுவை பிடிக்கும். சிலருக்குப் புளிப்பு, சிலருக்கு இனிப்பு, சிலருக்குக் காரம் என நாம் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு உணவை நம்மையும் அறியாமல் விரும்பிச் சாப்பிடுவோம். உடலில் ஏதேனும் ... மேலும் பார்க்க

Health: பட்ஸ் முதல் ஹெட்போன் வரை... காதை ஹைஜீனாக வைத்துக்கொள்ள என்னென்ன செய்யலாம்?

பலர், சும்மா இருக்கும்போது சாவி, பென்சில், பேப்பர், பட்ஸ்... என எதையாவது வைத்துக் காது குடைவதை வாடிக்கையாகக் கொண்டிருப்பார்கள். இந்தச் செயல், அவர்கள் ஹைஜீனைப் பாதித்து, நோய் ஏற்படவும், காதில் பிரச்னை ... மேலும் பார்க்க

Health: கழுத்துல ஆரம்பிச்சு கால் வரைக்கும் வலிக்குதா? காரணம் இதுவாகவும் இருக்கலாம்!

''சாப்பிட நேரமில்லாதது; வேக வேகமா சாப்பிடுற இயல்பு; சாப்பிடுறதுல கவனத்தைச் செலுத்தி சாப்பிடாததுன்னு பல காரணங்களால நூத்துல 90 பேர் ஒருபக்கமா தான் மென்னு சாப்பிடுறாங்க. பல வருடங்கள் இதுவே தொடர்கிறபட்சத்... மேலும் பார்க்க

இளமையைக் காக்கும் தேங்காய் எண்ணெய்; எப்படிப் பயன்படுத்துவது?

`தேங்காய் எண்ணெய்யா... அது முழுக்க கொலஸ்ட்ரால்ப்பா! சாப்பிடவே கூடாது’ என்ற வதந்தியை யார் கிளப்பிவிட்டது எனத் தெரியவில்லை. தமிழகத்தில் பலரும் நம் பாரம்பரிய தேங்காய் எண்ணெயை உணவில் பயன்படுத்துவதைக் கிட்... மேலும் பார்க்க