செய்திகள் :

இந்தியாவில் 257 பேருக்கு கரோனா! தமிழகம், கேரளம், மகாராஷ்டிரத்தில் பாதிப்பு!

post image

நாட்டில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட கரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்த நிலையில் தற்போது சீனா, சிங்கப்பூர் நாடுகளில் அதிகமாகப் பரவி வருகிறது.

இந்தியாவிலும் கரோனா பாதிப்பு மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் இந்தியாவில் 257 பேருக்கு கரோனா தொற்று இருப்பதாகக் கூறியுள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு லேசான பாதிப்புதான் இருப்பதாகவும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. மேலும் கரோனா பாதிப்பு தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலில், தமிழகத்தில் மட்டும் 34 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கரோனா பாதிப்பு கட்டுப்பாட்டில் இருப்பதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கேரளம்(69), மஹாராஷ்டிரத்திலும்(44) கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த ஒரு வாரத்தில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா வைரஸ் ஓமிக்ரான் BA.2.86-இன் புதிய வகையான ஜேஎன். 1(JN.1) வைரஸ்தான் தற்போது அதிகம் பரவி வருகிறது. காய்ச்சல், தொண்டைப்புண், மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு, வறட்டு இருமல், சோர்வு, தலைவலி, சுவைத் தன்மையை இழத்தல், தசை வலி, கண் சிவத்தல், வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்டவை இதன் அறிகுறிகளாக இருக்கின்றன. இந்த ஜேஎன். 1 வகை வைரஸில் LF.7, NB.1.8 உள்பட 30 வகைகள் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

இதையும் படிக்க | காட்டன் பட்ஸ்களைப் பயன்படுத்தலாமா? குறட்டை நல்லதா? - நம்பிக்கையும் உண்மையும்!

தில்லி சட்டப்பேரவையில் சாவர்க்கர், மாளவியா படங்கள்!

தில்லி சட்டப்பேரவையில் விரைவில் சாவர்க்கர், மாளவியா ஆகியோரின் படம் திறக்கப்படக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லி சட்டப்பேரவையில், விநாயக் தாமோதர் சாவர்க்கர், மதன் மோகன் மாளவியா மற்றும் தயாநந்... மேலும் பார்க்க

கேரளத்தின் வட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! வெள்ளம், நிலச்சரிவு அபாய எச்சரிக்கை!

கேரளத்தின் வட மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்குப் பருவமழை முன்னதாகவே தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதால், வயநாடு உள்ளிட்ட கேரளத்தின் 4 வட மாவ... மேலும் பார்க்க

கர்நாடகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு ‘ரெட் அலார்ட்’! 5 பேர் பலி

கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழையினால் அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இன்று (மே 20) பெய்து வரும் கனமழையினால், 7 கடலோர மாவட்டங்கள் மற... மேலும் பார்க்க

உலகின் மிகப்பெரிய சுகாதாரக் காப்பீடு திட்டம் ஆயுஷ்மான் பாரத்: பிரதமர் மோடி

உலகின் மிகப்பெரிய சுகாதாரக் காப்பீடு திட்டம், இந்தியாவின் ஆயுஷ்மான் பாரத் என்றும் இதில் 58 கோடி மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்குவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஜெனீவாவில் நடைபெற்ற... மேலும் பார்க்க

வங்கக் கடலில் நிலநடுக்கம்...!

வங்கக் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பதிவாகியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.வங்கக் கடல் பகுதியில், கடலுக்கடியில் இன்று (மே 20) மாலை 3.15 மணியளவில், 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது பதிவாகி... மேலும் பார்க்க

மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொலை: கணவர் வெறிச்செயல்!

கர்நாடகத்தின் பெலகவி மாவட்டத்தில் குழந்தை இல்லாததால் மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதானி தாலுகாவில் உள்ள மலபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் காமண்ணா கொனகா... மேலும் பார்க்க