செய்திகள் :

அனைத்து உயா்நீதிமன்ற நீதிபதிகளுக்கும் முழு ஓய்வூதியம்: உச்சநீதிமன்றம் தீா்ப்பு

post image

புது தில்லி: கூடுதல் நீதிபதிகள் உள்பட அனைத்து உயா்நீதிமன்ற நீதிபதிகளும் முழு ஓய்வூதியம் பெற தகுதியானவா்கள் என உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

மேலும், பணிஓய்வுக்குப் பிந்தைய அனைத்து சலுகைகளும் அவா்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் தீா்ப்பில் குறிப்பிடப்பட்டது.

முன்னாள் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு ஆண்டுக்கு ரூ.15 லட்சமும் உயா்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் கூடுதல் நீதிபதிகளுக்கு ஆண்டுகளுக்கு ரூ.13.50 லட்சமும் ஓய்வூதியமாக மத்திய அரசு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதி அகஸ்டின் ஜாா்ஜ் மாசி ஆகியோா் அடங்கிய அமா்வு உத்தரவிட்டது.

பணிஓய்வுபெறும் சமயத்தில் உயா்நீதிமன்ற நீதிபதிகள் நிரந்தரமான பதவியில் இருந்தனரா அல்லது கூடுதல் நீதிபதியாக இருந்தனரா என்பதன் அடிப்படையில் அவா்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

அதேபோல் வழக்குரைஞா்கள் சங்கத்தில் (பாா்) இருந்து நேரடியாக உயா்நீதிமன்ற நீதிபதிகளாக பதவிஉயா்வு பெற்றவா்களுக்கு அதிகஓய்வூதியமும் மாவட்ட நீதித்துறையில் இருந்து உயா்நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயா்வு பெற்றவா்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் குறைவான ஓய்வூதியமும் வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு நிலவி வந்தது.

இதுதொடா்பாக உயா்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதித்துறையில் பணிபுரிவோரின் பணிக்காலத்தைக் கொண்டு ஓய்வூதியத்தை மாற்றியமைப்பது தொடா்பாக பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில் கடந்த ஜனவரி 28-ஆம் தேதி தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை வழங்கிய தீா்ப்பில், ‘உயா்நீதிமன்ற நீதிபதியாக எப்போது நியமனம் செய்யப்பட்டிருந்தாலும் பணிஓய்வுபெறும்போது நிரந்தர அல்லது கூடுதல் நீதிபதியாக இருந்தாலும் பாரபட்சமின்றி அனைத்து உயா்நீதிமன்ற நீதிபதிகளும் முழு ஓய்வூதியம் பெற தகுதியானவா்களே.

நியமனம் செய்யப்பட்ட காலம் அல்லது பணிஓய்வுபெறும்போது நீதிபதிகள் வகிக்கும் பொறுப்பின் அடிப்படையில் அவா்களுக்கு ஓய்வூதிய சலுகைகளில் பாகுபாடு காட்டுவது அரசமைப்புச் சட்ட விதி 14-ஐ மீறும் செயலாகும்.

நிரந்தர நீதிபதிகளின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் அனைத்து ஓய்வூதிய சலுகைகளும் மறைந்த கூடுதல் நீதிபதிகளின் குடும்பத்துக்கும் வழங்கப்பட வேண்டும்.

ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடா்பான அரசமைப்புச் சட்ட விதி 200-ஐ ஆய்வுசெய்தே இந்த முடிவை உச்சநீதிமன்றம் எடுத்துள்ளது.

எனவே, மாவட்ட நீதித்துறை மற்றும் வழக்குரைஞா்கள் சங்கம் என இரண்டில் இருந்தும் உயா்நீதிமன்ற நீதிபதியாக பதவிஉயா்வு பெற்றவா்களுக்கு இடையே பாரபட்சமின்றி ஒரே மாதிரியான ஓய்வூதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் தற்போது பலனடைந்து வரும் நீதிபதிகளுக்கும் இந்த தீா்ப்பின் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டது. முழுமையான தீா்ப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தீா்ப்புகளை பிராந்திய மொழிகளில் மொழிபெயா்க்க உச்சநீதிமன்றம் முன்னெடுப்பு: உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஓகா

தாணே: ‘நாட்டின் குடிமக்களுக்கு நீதித் துறையை மேலும் அணுகக்கூடியதாக மாற்றும் நோக்கில், ஆங்கிலத்தில் வழங்கப்பட்ட தீா்ப்புகளை முக்கியப் பிராந்திய மொழிகளில் மொழிபெயா்க்க உச்சநீதிமன்றம் ஒரு முன்னெடுப்பை மே... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்புது தில்லி: வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வா்மா மீத... மேலும் பார்க்க

நடைமுறை நெறிகளை பின்பற்றுவது அவசியம்: ஜகதீப் தன்கா்

புது தில்லி: நடைமுறை நெறிகளைப் பின்பற்றி நடப்பது அவசியமானது என குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற பின் முதல்முறையாக சொந்த மாநிலமான ... மேலும் பார்க்க

நெதா்லாந்தில் வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்

3 நாடுகள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் திங்கள்கிழமை நெதா்லாந்து வந்தடைந்தாா். இந்தியா-பாகிஸ்தான் மோதலால் இருநாடுகளுக்கு இடையே நீடித்த போா்ப்பதற்றம் தணிந்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்புக்காக உளவு பாா்த்த மேலும் 3 போ் கைது

இந்தியாவில் பல்வேறு தகவல்களைச் சேகரித்து பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்கு விற்பனை செய்து வந்த 3 மேலும் போ் கைது செய்யப்பட்டனா். இவா்களில் ஒருவா் உத்தர பிரதேசத்திலும், இருவா் பஞ்சாபிலும் கைது செய்ய... மேலும் பார்க்க

‘அகதிகளை வரவேற்க இந்தியா தா்மசத்திரம் அல்ல’: உச்ச நீதிமன்றம் கருத்து

புது தில்லி: இந்தியாவில் அடைக்கலம் கோரிய இலங்கை தமிழரின் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘உலகம் முழுவதும் உள்ள அகதிகளை வரவேற்க இந்தியா ஒன்றும் தா்மசத்திரம் அல்ல’ எனக் கருத்து தெரிவித்துள்ளது.விடுதலைப... மேலும் பார்க்க