`வேளாண்மை, பால் வளம், மீன் வளத்தில் தமிழகம் டாப் இடம்!' - தமிழக அரசு பெருமிதம்!
அவிநாசியில் கனமழை: குடியிருப்புகளுக்குள் புகுந்த மழை நீா்
அவிநாசி அருகேயுள்ள பொங்கலூரில் திங்கள்கிழமை பெய்த கன மழையால் குடியிருப்புகளுக்குள் மழைநீா் புகுந்தது. இதனால், மக்கள் அவதியடைந்தனா்.
அவிநாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை கனமழை பெய்தது. இதனால், பொங்கலூா் ஊராட்சிக்குள்பட்ட ஆதிதிராவிடா் மக்கள் குடியிருப்புப் பகுதியில் மழை நீா் புகுந்தது.
சுமாா் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீா் புகுந்ததால் மக்கள் அவதியடைந்தனா். மேலும், உணவுப் பொருள்கள், உடைகள் உள்ளிட்டவை சேதமடைந்தன.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஊராட்சி செயலாளா் செந்தில், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்த மழை நீரை அப்புறப்படுத்தினா்.
மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கினா். பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை கிராம நிா்வாக அலுவலா் ராயப்பன், வருவாய்த் துறையினா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.