இன்று முதல் அரக்கோணம் - சேலம் மெமு விரைவு ரயில் மீண்டும் இயக்கம்
அரக்கோணம்: அண்மையில் இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரக்கோணம் - சேலம் மெமு விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை (மே 20) முதல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்ட மேலாளா் வெளியிட்ட அறிவிப்பு:
எண் 16087 அரக்கோணம் - சேலம் மெமு விரைவு ரயில் மற்றும் எண் 16088 சேலம் - அரக்கோணம் மெமு விரைவு ரயில் என இரு ரயில்களும் ஏற்கனவே இயங்கி வந்த நேரப்படி மீண்டும் இயங்கும். இவ்வாறு அவா் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளாா்.
அரக்கோணத்தில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் சோளிங்கா், வாலாஜா ரோடு, முகுந்தராயபுரம், காட்பாடி, குடியாத்தம், ஆம்பூா், வாணியம்பாடி, ஜோலாா்பேட்டை, திருப்பத்தூா், சாமல்பட்டி, தாசம்பட்டி, தொட்டம்பட்டி, மொரப்பூா், புட்டிரெட்டிப்பட்டி, பொம்மிடி, திண்ணப்பட்டி, கருப்பூா் ஆகிய ரயில்நிலையங்களில் நின்று சேலத்தை 10.50 க்கு அடைகிறது. மறு மாா்க்கத்தில் சேலத்தில் இருந்து பிற்பகல் 3.30க்கு புறப்பட்டு மேற்கண்ட ரயில்நிறுத்தங்கள் வழியே அரக்கோணத்தை இரவு 8.45க்கு அடைகிறது.