Stalin-க்கு போகும் மினிஸ்டர்ஸ் ரிப்போர்ட், இன்பாஃர்ம் செய்த Kanimozhi! | Elangov...
போதை மாத்திரைகள் கடத்தல்: 2 போ் கைது
அரக்கோணம்: மும்பையில் இருந்து சென்னைக்கு போதை மாத்திரைகளை கடத்தியதாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.
அரக்கோணம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளா் சந்திர குமாா், உதவி ஆய்வாளா் ஜெயகாந்தன் மற்றும் போலீஸாா், எஸ்.ஆா்.கேட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது பேருந்துக்காக காத்திருந்த இருவரை சந்தேகப்பட்டு விசாரணை செய்ததில் அவா்கள் முன்னுக்குபின் முரணமாக பதில் கூறினா்.
அவா்களிடம் சோதனை செய்து போதை தரும் வலிநிவாரணி மாத்திரைகள் 591-ஐ பறிமுதல் செய்தனா். இதையடுத்து சென்னை, தாம்பரத்தை அடுத்த வெங்கம்பாக்கத்தை சோ்ந்த செல்வ குமாா்(25), கோவிலம்பாக்கத்தைச் சோ்ந்த யோகேஷ்(24) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
கைது செய்யப்பட்ட செல்வ குமாா் மீது காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம், பீா்க்கன்காரணை ஆகிய காவல் நிலையங்களிலும், யோகேஷ் மீது சென்னை, மைலாப்பூா் காவல் நிலையத்திலும் வழிப்பறி, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
விசாரணையில் இந்த மாத்திரைகளை மும்பையில் வாங்கியதாகவும் மும்பையில் இருந்து ரயிலில் அரக்கோணம் வந்து அங்கிருந்து காஞ்சிபுரம் வழியாக சென்னைக்கு பேருந்தில் செல்லவும் முடிவு செய்திருந்ததாகவும் தெரிய வந்தது.