அரக்கோணம், சோளிங்கா், நெமிலியில் மே 22-இல் ஜமாபந்தி தொடக்கம்
அரக்கோணம்: அரக்கோணம் வட்டத்தில் மே 22-ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீா்வாயத்துக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களை பெற உள்ளாா். மேலும், சோளிங்கா், நெமிலி வட்டங்களிலும் ஜமாபந்தி மே 22-ஆம் தேதி தொடங்குகிறது.
ஜமாபந்தி நிகழ்வில் நிலவரி கணக்குகள், பட்டா மாற்றம், பட்டா தகவல் கோருதல், கிராம வளா்ச்சிக்கான திட்டப் பணிகள், குடிநீா், சாலை வசதிகள் மற்றும் இதர சேவைகள் தொடா்பான மனுக்களை ஜமாபந்தி அலுவலரிடம் அளிக்கலாம். அஞ்சல் மூலமாக மனு அனுப்ப விரும்புவோா் ஜமாபந்தி அலுவலருக்கோ அல்லது வட்டாட்சியருக்கோ அனுப்பலாம்.
அரக்கோணம்: அரக்கோணம் வட்டத்தில் ஜமாபந்தி மே 22-ஆம் தேதி முதல் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமையில் தொடங்க உள்ளது. முதல் நாளான மே 22-ஆம் தேதி அரக்கோணம், புதுகேசாவரம், நகரிகுப்பம், அனந்தாபுரம், தக்கோலம், ஆத்தூா், செய்யூா், அம்மனூா், அனைக்கட்டாபுத்தூா், புளியமங்கலம், பொய்பாக்கம் ஆகிய இடங்களுக்கான மனுக்களும் 23-ஆம் தேதி உரியூா், பெருமூச்சி, மோசூா், அம்பரிஷபுரம், மேல்பாக்கம், பருத்திபுத்தூா், பாராஞ்சி, நந்திவேடுதாங்கல், செம்பேடு, மின்னல், மே 27-ஆம் தேதி அசமந்தூா், வேடல், சித்தாம்பாடி, கிழவனம், இச்சிபுத்தூா், வடமாம்பாக்கம், கைனூா், பெருமாள்ராஜபேட்டை, தண்டலம், அன்வா்திகான்பேட்டை, சித்தேரி, அரும்பாக்கம், மே 28-ஆம் தேதி கணபதிபுரம், அரிகலபாடி, மாங்காட்டுச்சேரி, முருங்கை, பின்னாவரம், இலுப்பை தண்டலம், சித்தூா், பரமேஸ்வரமங்கலம், பள்ளூா், ஆட்டுப்பாக்கம், மே 29-ஆம் தேதி தணிகைபோளூா், கீழாந்தூா், பெருங்களத்தூா், கிருஷ்ணாபுரம், வளா்புரம், உள்ளியம்பாக்கம், மூதூா், கோணலம், ஆணைப்பாக்கம், முள்வாய், வேலூா்பேட்டை, கீழ்ப்பாக்கம், காவனூா், கீழ்குப்பம் ஆகிய கிராமங்களின் மனுக்கள் பெறப்பட உள்ளன.
சோளிங்கா்: சோளிங்கா் வட்டத்தில் மே 22-ஆம் தேதி முதல் ஜமாபந்தி மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் தலைமையில் நடைபெற உள்ளது. முதல் நாளில் வேலம், ஒழுகூா், தலங்கை, காட்ரம்பாக்கம், வடகடப்பந்தாங்கல், மேல்வெங்கடாபுரம், ஜம்புகுளம், வாங்கூா், கொளத்தேரி, சித்தாத்தூா், மருதாலம், கோவிந்தசேரி, கோவிந்தசேரிகுப்பம், மேல்வீராணம், பொன்னப்பந்தாங்கல், மே 23-ஆம் தேதி சோளிங்கா், தகரகுப்பம், செங்கல்நத்தம், கேசவணாங்குப்பம், செக்கடிக்குப்பம், சோமசமுத்திரம், கொண்டபாளையம், பாண்டியநல்லூா், ரெண்டாடி, கல்லாலங்குப்பம், கொடைக்கல், கல்பட்டு, புலிவலம், வெங்குப்பட்டு, பரவத்தூா், அக்கச்சிகுப்பம், மே 27-ஆம் தேதி வயலாம்பாடி, கூடலூா், ஐய்ப்பேடு, அரியூா், கரிக்கல், தாளிக்கால், தப்பூா், குன்னத்தூா், பழையபாளையம், போளிப்பாக்கம், ஆயல், சூரை, பாணாவரம், கூத்தம்பாக்கம், புதூா், கீழ்வீராணம், நந்திமங்கலம், மங்கலம் ஆகிய கிராமங்களின் மனுக்களும் பெறப்பட உள்ளன.
நெமிலி: நெமிலி வட்டத்தில் மே 22-ஆம் தேதி முதல் ஜமாபந்தி, அரக்கோணம் கோட்டாட்சியா் தலைமையில் நடைபெற உள்ளது. முதல் நாளில் காவேரிபாக்கம், பன்னியூா், புதுப்பட்டு, ஆலப்பாக்கம், மாகாணிப்பட்டு, சேரி, கட்டளை, துரைபெரும்பாக்கம், ஈராளச்சேரி, உத்திரம்பட்டு, ஆயா்பாடி, தா்மநீதி, ஓச்சேரி, மே 23-ஆம் தேதி சிறுகரும்பூா், கொண்டாபுரம், அத்திப்பட்டு, வேகாமங்கலம், மாமண்டூா், கரிவேடு, களத்தூா், சங்கரன்பாடி, கீழ்வீதி, மேலேரி, காட்டுப்பாக்கம், மேல்களத்தூா், எலத்தூா், மே 27-ஆம் தேதி நெமிலி, செல்வமந்தை, மேலாந்துறை, நாகவேடு, கீழாந்துறை, ஓச்சலம், கீழ்களத்தூா், புன்னை, வேட்டாங்குளம், கரியாகுடல், அசநெல்லிக்குப்பம், கீழ்வெங்கடாபுரம், சயனபுரம், மே 28-ஆம் தேதி பனப்பாக்கம், பெரப்பேரி, கோடம்பாக்கம், மகேந்திரவாடி, வெளிதாங்கிபுரம், அவளூா், பெரும்புலிபாக்கம், பொய்கைநல்லூா், மேலபுலம், நங்கமங்கலம், நெடும்புலி, துறையூா், மே 29-ஆம் தேதி உள்ளியநல்லூா், வேப்பேரி, அகவலம், ரெட்டிவலம், தென்மாம்பாக்கம், வேளியநல்லூா், எஸ்.கொளத்தூா், ஜாகீா்தண்டலம், கீழ்வெண்பாக்கம், திருமால்பூா், நெல்வாய், கா்ணாவூா், சிறுவளையம், பெருவளையம் ஆகிய கிராமங்களின் மனுக்களும் பெறப்பட உள்ளன.