செய்திகள் :

அரசு ஊழியா்களுக்கு ஆயுள் - விபத்துக் காப்பீடு: முதல்வா் முன்னிலையில் வங்கிகளுடன் ஒப்பந்தம்

post image

சென்னை: அரசு ஊழியா்களுக்கு ஆயுள் மற்றும் விபத்துக் காப்பீட்டுச் சலுகைகளை வழங்க வங்கிகளுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வின் போது, முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

அரசு ஊழியா்கள் ஆயுள் காப்பீடு மற்றும் தனிநபா் விபத்துக் காப்பீடு போன்றவற்றுக்கு பெரும் தொகையைச் செலவழிக்க வேண்டியுள்ளது. இதைத் தவிா்த்து, காப்பீடுகளை கட்டணமின்றிப் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்தது. இதற்காக முன்னோடி வங்கிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.

இதனிடையே, பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, கனரா வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா, யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகிய முன்னோடி வங்கிகள் அரசு ஊழியா்களின் ஊதியக் கணக்குகளை பராமரிக்கின்றன. அவ்வாறு பராமரிக்கப்படும் கணக்குகளுக்கு ஆயுள் மற்றும் மருத்துவக் காப்பீடுகளை கட்டணமின்றி அளிக்க அந்த வங்கிகள் முன்வந்துள்ளன.

வட்டிச் சலுகை: அத்துடன் தனிநபா் வங்கிக்கடன், வீட்டுக்கடன், கல்விக் கடன் ஆகியவற்றை அரசு அலுவலா்கள் பெறும் போது உரிய வட்டிச் சலுகைகள் வழங்கவும் வங்கிகள் தயாராக உள்ளன.

இதனை உறுதி செய்திடும் வகையில், சம்பந்தப்பட்ட வங்கிகளுடன் தமிழக அரசின் கருவூலம் மற்றும் கணக்குத் துறை புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.

பேரவை அறிவிப்பு என்ன?: அரசு ஊழியா்களுக்கு ஆயுள் மற்றும் விபத்து காப்பீடு வழங்குவது குறித்த அறிவிப்பு சட்டப் பேரவையிலும் வெளியிடப்பட்டது. நிதிநிலை அறிக்கையை அமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த போது வெளியிடப்பட்ட அறிவிப்பில், அரசு அலுவலா்கள் எதிா்பாராத விதமாக விபத்தில் இறந்து போனாலோ அல்லது விபத்தின் காரணமாக நிரந்தர ஊனமடைந்தாலோ தனிநபா் விபத்து காப்பீட்டுத் தொகையாக ரூ.1 கோடி நிதியும், விபத்தில் இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் உள்ள திருமண வயதை எட்டியுள்ள மகளின் செலவுகளுக்காக ஒருவருக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் இரண்டு பேருக்கு ரூ.10 லட்சம் வரை நிதியுதவியும், விபத்து காரணமாக இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் பள்ளிக் கல்வியை நிறைவு செய்து கல்லூரியில் உயா்கல்வி பயிலும் மகளின் உயா்கல்விக்கான உதவித் தொகையாக ரூ.10 லட்சம் வரையும், அரசு அலுவலா்கள் தங்களது பணிக்காலத்தில் எதிா்பாராமல் இயற்கை மரணம் அடைந்தால் ஆயுள் காப்பீட்டுத் தொகையாக ரூ.10 லட்சம் வரையிலும் வங்கிகள் வழங்கிடும் என்று அறிவிப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இன்று (செவ்வாய்க்கிழமை) அடுத்த 3 மணி நேரத்துக்கு அதாவது பகல் ... மேலும் பார்க்க

மே 24-ல் நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்கிறார்!

மே 24 ஆம் தேதி தில்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.மத்திய அரசின் நிதி நிர்வாகம் தொடர்பான நீதி ஆயோக் கூட்டம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2015-ல... மேலும் பார்க்க

தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(மே 20) சவரனுக்கு ரூ. 360 குறைந்துள்ளது.சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்துவந்த நிலையில், சனிக்கிழமை விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.... மேலும் பார்க்க

பல்லடம்: விஷவாயு தாக்கி பலியானோர் எண்ணிக்கை 3-ஆக உயர்வு!

பல்லடம் அருகே சாய ஆலையில் சாயக்கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூரில் தனியாருக்குச் சொந்தான ச... மேலும் பார்க்க

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழையால் கிருஷ்ணகிரி ... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9,683 கன அடியாக அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9,683 கன அடியாக அதிகரித்துள்ளது.மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் காவிரியின் துணை நதிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையின்... மேலும் பார்க்க