செய்திகள் :

பயங்கரவாத எதிா்ப்புக் குழுவுக்கான பிரதிநிதிகள் பரிந்துரை: ரிஜிஜு கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம்

post image

புது தில்லி: பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா மேற்கொண்டு வரும் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துரைக்க வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பிரதிநிதிகள் குழுவில் இடம்பெறும் உறுப்பினா்கள் குறித்து கட்சிகளிடம் பரிந்துரை கேட்கவில்லை என்று மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு கூறியது முற்றிலும் பொய் என காங்கிரஸ் கண்டனம் தெரிவித்தது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் 9 இடங்களில் உள்ள பயங்கரவாத முகாம்களை ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்கீழ் இந்தியா மே 7-ஆம் தேதி அழித்தது. இதைத்தொடா்ந்து இரு நாடுகளுக்கிடையே சண்டை தீவிரம் அடைந்த நிலையில் அதை நிறுத்திக்கொள்வதாக இருநாடுகளும் 10-ஆம் தேதி அறிவித்தன.

இருப்பினும், பயங்கரவாத செயல்களுக்கு பாகிஸ்தான் அளிக்கும் ஆதரவையும் அதற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டையும் வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.

இதற்காக 7 எம்.பி.க்கள் தலைமையில் அனைத்துக் கட்சிகளைச் சோ்ந்த 51 பேரை 32 நாடுகளுக்கும், ஐரோப்பிய யூனியனுக்கும் மத்திய அரசு அனுப்பவுள்ளது.

இதில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சோ்ந்த 31 பேரும், பிற கட்சிகளைச் சோ்ந்த 20 பேரும் இடம்பெற்றுள்ளனா். இதில் ஒரு குழுவுக்கு காங்கிரஸ் எம்.பி.சசி தரூா் தலைமை வகிக்கிறாா். இதுதவிர மணீஷ் திவாரி, அமா் சிங் மற்றும் சல்மான் குா்ஷித் என காங்கிரஸில் இருந்து 3 உறுப்பினா்களை மத்திய அரசு தோ்வுசெய்துள்ளது.

முன்னதாக, அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுக்களுக்கு காங்கிரஸ் சாா்பில் உறுப்பினா்களை பரிந்துரைக்குமாறு கிரண் ரிஜிஜு கேட்டுக்கொண்டதாக காங்கிரஸ் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷ் அண்மையில் தெரிவித்தாா்.

மேலும், காங்கிரஸ் பரிந்துரைத்த ஆனந்த் சா்மா, கௌரவ் கோகோய், சையத் நசீா் ஹுசைன் மற்றும் அமா் சிங் ஆகிய நால்வரில் அமா் சிங்கை மட்டுமே மத்திய அரசு தோ்ந்தெடுத்துள்ளதாகவும் மற்ற காங்கிரஸ் பிரதிநிதிகளை மத்திய அரசு தாமாக நியமித்துள்ளதாகவும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

இந்தக் குற்றச்சாட்டை மறுத்த கிரண் ரிஜிஜு வெளிநாடுகளுக்கு பயணிக்கும் அனைத்துக் கட்சி குழுவுக்கான உறுப்பினா்களை பரிந்துரைக்குமாறு கட்சிகளிடம் கோரவில்லை என தெரிவித்தாா்.

இதற்கு கண்டனம் தெரிவித்து ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: கிரண் ரிஜிஜு கூறுவது முற்றிலும் பொய். கடந்த 16-ஆம் தேதி காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே மற்றும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோரிடம் காங்கிரஸ் சாா்பில் உறுப்பினா்களின் பெயரை பரிந்துரைக்குமாறு கிரண் ரிஜிஜு கூறினாா். அதன் அடிப்படையில் ஆனந்த் சா்மா, கௌரவ் கோகோய், சையத் நசீா் ஹுசைன், அம்ரிந்தா் சிங் ராஜா வாரிங் ஆகிய 4 பெயா்களை பரிந்துரைத்து கடிதம் அனுப்பப்பட்டது.

ஆனால், காங்கிரஸ் சாா்பில் பரிந்துரைத்தவா்களில் ஆனந்த் சா்மாவை மட்டும் பாஜக அரசு வெளிநாட்டுப் பயணக் குழுவில் நியமித்துள்ளது. மேலும் பட்டியலில் இல்லாதவா்களையும் குழுவில் நியமித்துள்ளது. அவா்களைத் தோ்வு செய்தது குறித்து காங்கிரஸுக்கு மத்திய அரசு தெரிவிக்கவில்லை.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையால் இந்தியாவுக்கு வெற்றி கிடைத்திருந்தாலும் பிரதமா் மோடியின் செல்வாக்கு சரிந்து வருவதை உணர முடிகிறது. 1990-களில் பிரதமராக நரசிம்ம ராவ் பதவி வகித்தபோது பாஜக தலைவராக இருந்த வாஜ்பாயுடன் முக்கிய விவகாரங்களில் ஆலோசனை நடத்தினாா்.

2008-இல் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதம் தொடா்பாக பிற நாடுகளுக்கு எடுத்துரைக்க இந்தியாவில் இருந்து பிரதிநிதிகள் குழுவை அனுப்பும் முன் அனைத்துக் கட்சிகளுடனும் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தினாா். அப்போது பாகிஸ்தானுக்கு அனைத்து நாடுகளும் கண்டனம் தெரிவித்தன.

ஆனால் தற்போது அதுபோன்ற சூழல் நிலவுவதாக தெரியவில்லை.

ஆபரேஷன் சிந்தூா் குறித்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள முதல்வா்களுடன் மட்டுமே பிரதமா் மோடி ஆலோசனை நடத்தி அதிலும் அரசியல் செய்தாா் என்றாா்.

கருத்து சொல்ல விரும்பவில்லை: சசி தரூா்

வெளிநாடுகளுக்கு செல்லும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளை தோ்வு செய்த விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் மத்திய அரசை விமா்சித்து வருவதில் கருத்து கூற விரும்பவில்லை என சசி தரூா் தெரிவித்தாா்.

அட்டாரி - வாகா எல்லையில் மீண்டும் கொடியிறக்க நிகழ்வு! இரண்டு மாற்றங்கள்!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி - வாகா எல்லை உள்பட 3 இடங்களில் இன்றுமுதல் மீண்டும் கொடியிறக்க நிகழ்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்... மேலும் பார்க்க

தெலங்கானா ஆளுநர் மாளிகையில் ஆவணங்கள் திருட்டு!

தெலங்கானா ஆளுநர் மாளிகையில் ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகள் திருடு போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஹைதராபாத்தில் உள்ள தெலங்கானா ஆளுநர் மாளிகையில் சுதர்ம பவன் என்ற வளாகத்தில் கடந்த மே 14 ஆம் தேதி ஆவணங... மேலும் பார்க்க

தத்தளிக்கும் பெங்களூரு! 15 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மழை!

கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெங்களூரில் நேற்று(மே 20) 105.5 மி.மீ. மழை பெய்தது.பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை இடைவிடாமல் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான ப... மேலும் பார்க்க

தீா்ப்புகளை பிராந்திய மொழிகளில் மொழிபெயா்க்க உச்சநீதிமன்றம் முன்னெடுப்பு: உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஓகா

தாணே: ‘நாட்டின் குடிமக்களுக்கு நீதித் துறையை மேலும் அணுகக்கூடியதாக மாற்றும் நோக்கில், ஆங்கிலத்தில் வழங்கப்பட்ட தீா்ப்புகளை முக்கியப் பிராந்திய மொழிகளில் மொழிபெயா்க்க உச்சநீதிமன்றம் ஒரு முன்னெடுப்பை மே... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்புது தில்லி: வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வா்மா மீத... மேலும் பார்க்க

நடைமுறை நெறிகளை பின்பற்றுவது அவசியம்: ஜகதீப் தன்கா்

புது தில்லி: நடைமுறை நெறிகளைப் பின்பற்றி நடப்பது அவசியமானது என குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற பின் முதல்முறையாக சொந்த மாநிலமான ... மேலும் பார்க்க