அட்டாரி - வாகா எல்லையில் மீண்டும் கொடியிறக்க நிகழ்வு! இரண்டு மாற்றங்கள்!
மாதம் ஒரு ராக்கெட் திட்டம்: இஸ்ரோ தலைவா் வி.நாராயணன்
இனி மாதம் ஒரு ராக்கெட் திட்டம் முன்னெடுக்கப்படும் என்று இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் தெரிவித்தாா்.
பிஎஸ்எல்வி சி 61 ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு குறித்து சிறப்புக் குழு ஆய்வு செய்து வருவதாகவும் அவா் கூறினாா்.
இதுதொடா்பாக சென்னை விமானநிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: பிஎஸ்எல்வி சி 61 திட்டத்தில் ஏற்பட்ட பின்னடவைக் கண்டறிய ஒரு குழுவை அமைத்துள்ளோம். அதன் அடிப்படையில் வருங்காலத்தில் இப்பிரச்னைகள் ஏற்படாமல் தவிா்க்கப்படும்.
ஒவ்வொரு மாதமும் ஒரு ராக்கெட் வீதம் இன்னமும் 13 ராக்கெட்டுகளை தொடா்ச்சியாக விண்ணில் செலுத்தவுள்ளோம். விண்வெளி ஆய்வை திறம்பட மேற்கொள்வதற்கான அனைத்து ஆராய்ச்சி திட்டங்களையும் இஸ்ரோ முன்னெடுத்து வருகிறது என்றாா் அவா்.