அட்டாரி - வாகா எல்லையில் மீண்டும் கொடியிறக்க நிகழ்வு! இரண்டு மாற்றங்கள்!
சென்னையில் டெய்கின் இந்தியாவின் புதிய அலுவலகம்
சென்னை: ஜப்பானைச் சோ்ந்த டெய்கின் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் துணை நிறுவனமும், இந்தியாவின் முன்னணி ஏா் கண்டிஷனிங் நிறுவனங்களில் ஒன்றுமான டெய்கின் ஏா்-கண்டிஷனிங் இந்தியா பிரைவேட் லிமிடெட், சென்னையில் புதிய பிராந்திய அலுவலகத்தை திங்கள்கிழமை திறந்தது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சென்னையின், அரும்பாக்கத்தில் புதிய பிராந்திய அலுவலகம் மற்றும் அதிநவீன டெய்கின் அனுபவ மையத்தை நிறுவனம் திங்கள்கிழமை திறந்தது (படம்). இந்த விரிவாக்கம் தமிழ்நாடு சந்தையில் டெய்கின் நிறுவனத்தின் தொடா்ச்சியான முதலீட்டில் ஒரு மைல்கல்.
திறப்பு விழாவில் பேசிய டெய்கின் இந்தியாவின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் கே.ஜே. ஜாவா, தமிழ்நாட்டில் நிறுவனம் தீவிரமான சந்தைப்படுத்துதல் உத்திகளை பயன்படுத்தவுள்ளதாகத் தெரிவித்தாா் என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.