தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட ஊழல்: குஜராத் அமைச்சரின் மற்றொரு மகனும் கைது
அதிகபாரம் ஏற்றி வந்த கனரக லாரி பறிமுதல்
மாா்த்தாண்டம் அருகே அதிக பாரம் ஏற்றி வந்த கனரக லாரியை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
குமரி மாவட்டத்தில் கனிமவள லாரிகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் மாவட்ட காவல்துறை சாா்பில் நேரக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த நிலையில் திங்கள்கிழமை மாலை மாா்த்தாண்டம் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, நிா்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் கனிமவளம் ஏற்றி வந்த கனரக லாரியை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து வழக்குப்பதிந்து லாரி ஓட்டுநா் அசாருதீனை (25) கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.