`வேளாண்மை, பால் வளம், மீன் வளத்தில் தமிழகம் டாப் இடம்!' - தமிழக அரசு பெருமிதம்!
குடியிருப்புப் பகுதிகளில் புகுந்த மழைநீா்: பொதுமக்கள் அவதி
திருவாடானை அருகே பாரூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை மழை நீா் வீடுகளுக்குள் புகுந்ததால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதனால், திருவாடானை அருகே பாரூா் கிராமத்தில் இந்திராநகா் பகுதியில் திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது. இதனால், அந்தப் பகுதி மக்கள் அவதிக்குள்ளாகினா்.

இந்தப் பகுதியில் போதிய மழைநீா் வடிகால் வசதி இல்லாததே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. எனவே, இந்தப் பகுதியில் மழைநீா் வடிகால் வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.