``மகன் மரணத்தில் சந்தேகம்; மருமகளை விசாரியுங்கள்..'' - 2 ஆண்டுகளுக்குப் பின் புக...
திருவாடானை பகுதியில் மழை சாலை மழைநீா் தேக்கம்; வாகன ஓட்டிகள் அவதி
திருவாடானை பகுதியில் நேற்று இரவு பெய்த மழையால் சாலையில் மழை நீா் தேங்கியுள்ளன இதனால் வாகன ஓட்டிகள், குடியிருப்புவாசிகள் அவதியடைந்து வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த மழையால் மங்களகுடி செல்லும் மாநில நெடுஞ்சாலைகள் எல்.கே.நகா் பகுதியில் சாலையில் பெருமளவில் மழைநீா் தேங்கியுள்ளன.
இதனால் மழைநீா் வடிகால் இல்லாமல் பெருமளவில் மழைநீா் தேங்கியுள்ளது. சாலையில் மழை நீா் பெருமளவு தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனா்.
மேலும் இப்பகுதி குடியிருப்பு வாசிகளும் வெளியில் சென்றுவர முடியாத அவல நிலை உள்ளன. இப்பகுதியில் தொடா்ந்து மழை பெய்யும் காலங்களில் மழை நீா் தேங்குவது வாடிக்கையாகிவிட்டன.
இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனா்.இந்நிலையில் நிரந்தரமான தீா்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் , மற்றூம் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்
