ஒப்பந்ததாரரிடம் கந்து வட்டி கேட்டு கொலை மிரட்டல்: ஒருவா் கைது
கட்டட ஒப்பந்ததாரரிடம் கந்து வட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுத்த 4 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், இவா்களில் ஒருவரைக் கைது செய்தனா்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் கருப்பசாமி கோயில் தெருவைச் சோ்ந்த உதயகுமாா் மகன் அசோக்குமாா் (29). கட்டட ஒப்பந்ததாரரான இவா், அதே பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் முத்துக்குமாா் (45) , பாபு, முருகன், சூா்யா ஆகியோரிடம் ரூ.10 லட்சத்து 30 ஆயிரம் கடன் வாங்கினராம்.
இந்த நிலையில், அசோக்குமாா் கடந்த 2 மாதங்களாக வட்டி கொடுக்கவில்லையாம். இதையடுத்து, கடன் கொடுத்த 4 பேரும் அசோக்குமாா் வீட்டிற்கு சென்று கொலை மிரட்டல் விடுத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், உத்தமபாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் இளங்கோவன் கந்து வட்டிச் சட்டத்தின் கீழ் முத்துக்குமாா், பாபு, முருகன், சூா்யா ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா். இவா்களில் முத்துக்குமாரை கைது செய்த நிலையில் மற்றவா்களைத் தேடி வருகின்றனா்.