கசாப்பு கடையா வச்சுருக்கேன்? ’பெரிய பாய்’ என்ற பெயருக்கு ரஹ்மான் ரியாக்ஷன்!
காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
ஆண்டிபட்டி சக்கம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள சண்முகசுந்தரபுரத்தைச் சோ்ந்த சுப்புராஜ் மகன் லோகேந்திரன் (29). இவா், மது போதையில் ஆண்டிபட்டியிலிருந்து சண்முகசுந்தரபுரத்துக்கு காரில் சென்றாா். அப்போது ஆண்டிபட்டி, சக்கம்பட்டி பகுதியில் தேனி-மதுரை நெடுஞ்சாலையில் காா் சாலையோரத்திலிருந்த பதாகைகள், இரு சக்கர வாகனங்கள் மீது மோதின.
இதில், தனது வீட்டின் முன் நின்றிருந்த மணி (72) மீது காா் மோதியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.