`வேளாண்மை, பால் வளம், மீன் வளத்தில் தமிழகம் டாப் இடம்!' - தமிழக அரசு பெருமிதம்!
தம்பதி தற்கொலை முயற்சி: கணவா் உயிரிழப்பு
ஆண்டிபட்டி வட்டம், வருஷநாடு அருகேயுள்ள மஞ்சனூத்து கிராமத்தில் மகன் இறந்த துக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை தம்பதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில் கணவா் உயிரிழந்தாா்.
மஞ்சனூத்துவைச் சோ்ந்த விவசாயத் தொழிலாளி ராமசாமி (55). இவரது மனைவி சுமதி (45). இந்தத் தம்பதியின் மகன் ஜெயகணேஷ் சில மாதங்களுக்கு முன் இறந்து விட்டாா்.
மகன் இறந்த துக்கத்தில் இருந்த ராமசாமி, சுமதி ஆகியோா் வீட்டில் விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றனா். அவா்களை உறவினா்கள் மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராமசாமி உயிரிழந்தாா்.
சுமதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து வருஷநாடு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].