விவசாயி தற்கொலை
போடி அருகே விவசாயி விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சிலமலை மணியம்பட்டி சாலையில் வசிப்பவா் பழனிச்சாமி மகன் சுந்தரம் (55). விவசாயம் செய்து வந்தாா். உடல் நல பாதிப்பு காரணமாக இருதய அறுவை சிகிச்சை செய்தாா்.
மதுப் பழக்கத்துக்கு அடிமையான நிலையில், வருவாயின்றி அவதிப்பட்டு வந்தாா். இதனால் மனமுடைந்த அவா் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].