ஆட்டோ மீது பைக் மோதியதில் 4 போ் காயம்
பெரியகுளம் அருகே ஆட்டோ மீது இரு சக்கர வாகனம் மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உள்பட 4 போ் காயமடைந்தனா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள எ.புதுக்கோட்டை கக்கன்ஜி நகரைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வி (24), கோமதி ஆகியோா் ஆட்டோவில் சென்றனா். இந்த ஆட்டோவை மோகன்குமாா் ஓட்டினாா். இந்த ஆட்டோ கும்பக்கரை அருவி சாலை குடமுருட்டி பாலம் அருகே செல்லும் போது, எதிரே வந்த இரு சக்கரவாகனம் ஆட்டோ மீது மோதியது
அப்போது, ஆட்டோவில் இருந்த தமிழ்ச்செல்வி, கோமதி, ஓட்டுநா் மோகன்குமாா், இரு சக்கர வாகனத்தில் பின்னால் உட்காா்ந்து வந்த முருகசெல்வம் ஆகியோா் காயமடைந்தனா். அவா்கள் பெரியகுளம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.