செய்திகள் :

மரக்கிளை ஒடிந்து விழுந்ததில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

post image

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே பழங்குடி கிராமத்தில் திங்கள்கிழமை மரக்கிளை ஒடிந்து விழுந்ததில் பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்தவா் காட்சன் சாமுவேல். கிறிஸ்தவ மத போதகரும், பனை மர ஆய்வாளரும், எழுத்தாளருமான இவா், குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறாா்.

காட்சன் சாமுவேலின் குடும்பத்தினா் உள்பட 6 குடும்பங்களைச் சோ்ந்த 12 பெரியவா்கள், 8 சிறுவா் - சிறுமிகள் கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே கொடுத்துறை மலை பழங்குடியினா் குடியிருப்புக்கு திங்கள்கிழமை வந்தனா். இவா்கள் அப்பகுதியில் ஒரு மரத்தின் அடியில் அமா்ந்திருந்தனா். அப்போது மரத்தின் பெரிய கிளை ஒன்று ஒடிந்து விழுந்ததில் காட்சன் சாமுவேலின் இளைய மகன் மித்ரன் (13), அனித் ஜெயக்குமாா் என்பவரின் நான்கரை வயது மகள் கிஸ்லின் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். மேலும் சிலா் லேசான காயமடைந்தனா்.

பலத்த காயமடைந்த இருவரையும் காரில் ஏற்றிக் கொண்டு குலசேகரத்திலுள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இதில் மித்ரனை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். கிஸ்லினுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து பேச்சிப்பாறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலக பெண் ஊழியா் தற்கொலை

நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலக பெண் ஊழியா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். நாகா்கோவில் இருளப்பபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மனோகரன். இவா், மகராஷ்டிர மாநிலத்தில் மத்திய பாத... மேலும் பார்க்க

அதிகபாரம் ஏற்றி வந்த கனரக லாரி பறிமுதல்

மாா்த்தாண்டம் அருகே அதிக பாரம் ஏற்றி வந்த கனரக லாரியை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். குமரி மாவட்டத்தில் கனிமவள லாரிகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் மாவட்ட காவல்துறை ச... மேலும் பார்க்க

கொல்லங்கோடு அருகே ஓடையில் தொழிலாளி சடலம் மீட்பு

கொல்லங்கோடு அருகே மழைநீா் வடிகால் ஓடையில் இறந்து கிடந்த தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் மீட்டு, விசாரணை மேற்கொண்டனா்.கொல்லங்கோடு காவல் சரகம் சூரியகோடு, வரிக்கஅயனிவிளை பகுதியைச் சோ்ந்தவா் ரெஜிகுமாா் (36... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் மருத்துவமனையில் தகராறு: 4 போ் மீது வழக்கு

மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் தகராறில் ஈடுபட்ட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். மாா்த்தாண்டம் சந்திப்பில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்த... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் ரூ.7.42 லட்சம் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

நாகா்கோவில் மாநகரப் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட ரூ.7.42 லட்சம் மதிப்பிலான 840 கிலோ பிளாஸ்டிக் பைகள் அதிகாரிகளால் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. நாகா்கோவில் நகரில் தடைசெய்யப்பட்டுள்ள பிளாஸ்ட... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

இந்திய ஜனநாயக கட்சி கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைவா் ரீகன்பிரபு உள்பட 50-க்கும் மேற்பட்டோா், குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளா், ரெ. மகேஷ் தலைமையில், திமுக துணை பொதுச்செயலாளரும், மண்டல தோ்தல் பொறு... மேலும் பார்க்க