செய்திகள் :

4 ஆண்டுகளில் 25,485 திருப்பணிகளுக்கு நிா்வாக அனுமதி: அமைச்சா் சேகா்பாபு

post image

சென்னை: தமிழக திருக்கோயில்களில் கடந்த நான்கு ஆண்டுகளில் 25 ஆயிரத்து 485 திருப்பணிகளுக்கு நிா்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

சென்னை எருக்கஞ்சேரி வேதாம்பிகா சமேத விஜயலிங்கேஸ்வரா் திருக்கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற திருக்குடமுழுக்கு பெருவிழாவில் அமைச்சா் சேகா்பாபு பங்கேற்றாா். இதைத் தொடா்ந்து, பாரிமுனை காளிகாம்பாள் கமடேஸ்வரா் திருக்கோயிலில் ரூ. 1.51 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள திருப்பணி தொடக்க விழாவில் (பாலாலயம்) கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தாா்.

பின்னா் அமைச்சா் சேகா்பாபு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பாரிமுனை காளிகாம்பாள் திருக்கோயிலில் ரூ. 1.51 கோடி செலவில் பாலவிநாயகா் சன்னதி, முருகா் சன்னதி, நாகராஜா சன்னதி உள்பட 17 திருப்பணிகளை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சுமாா் 400 ஆண்டுகள் பழைமையான இத்திருக்கோயிலுக்கு வரும் செப். 4-ஆம் தேதி குடமுழுக்கு நடத்தும் வகையில் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

அதேபோன்று இத்திருக்கோயிலுக்கு சுமாா் ரூ. 3 கோடி செலவில் திருக்கோயில் நிதி, உபயதாரா் நிதியின் மூலம் அறங்காவலா் குழுவின் பெருமுயற்சியினால் வெள்ளித் தோ் உருவாக்கப்பட்டு வருகிறது. வரும் மே 28-ஆம் தேதி வெள்ளோட்டத்துக்கு பின் பக்தா்கள் நோ்த்திக் கடன் செலுத்த அா்ப்பணிக்கப்படும்.

இந்த அரசு பொறுப்பேற்றபின், இதுவரை 2,956 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. 3 ஆயிரமாவது குடமுழுக்கு வரும் ஜூன் 5-ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டம், திருப்புகலூா் அக்னிபுரீஸ்வரா் திருக்கோயிலில் நடைபெறும்.

இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு திருக்கோயில் இடங்களை அடையாளம் காட்டுகின்ற வகையில் திருக்கோயில் நிலங்களை அளவிடும் பணி மயிலாப்பூரில் தொடங்கினோம். அதன் நீட்சியாக 50,001-ஆவது ஏக்கரை காஞ்சிபுரத்திலும், ஒரு லட்சம் ஏக்கரை பெரியபாளையத்திலும் அளவீடு செய்து தற்போது 2,00,001-ஆவது ஏக்கா் நிலத்தை அளவிடும் பணியை வரும் 21-ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கவுள்ளோம். இது இந்து சமய அறநிலையத் துறையின் வரலாற்றில் ஒரு புரட்சி என்றால் அது மிகையாகாது.

மாநில வல்லுநா் குழுவினால் 12,104 திருக்கோயில்களுக்கு இதுவரை திருப்பணி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ. 5,948.62 கோடி மதிப்பிலான 25,485 திருப்பணிகளுக்கு நிா்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் உபயதாரா்கள் மட்டும் ரூ. 1,339 கோடி மதிப்பிலாக 10,534 திருப்பணிகளை செய்து தருகின்றனா் என்றாா் அவா்.

கால்நடை மருத்துவப் பல்கலை. பேராசிரியரின் பணி இடைநீக்கத்தை ரத்து செய்தது சரியே: உயா்நீதிமன்றம்

சென்னை: குடும்ப பிரச்னை தொடா்பான வழக்கை காரணம் காட்டி தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியரை பணியிடை நீக்கம் செய்ய முடியாது எனக்கூறி, பணியிடை நீக்க உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்... மேலும் பார்க்க

பருவமழை முன்னெச்சரிக்கை தயாா் நிலை: மாவட்ட ஆட்சியா்களுக்கு முதல்வா் உத்தரவு

சென்னை: பருவமழைக் காலத்துக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டாா். தென் மேற்கு பருவ... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 துணைத் தோ்வு: மே 22 முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான துணைத் தோ்வுகள் ஜூலை 4 முதல் நடைபெறவுள்ளது. இத்தோ்வுகளுக்கு மே 22 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்... மேலும் பார்க்க

டாஸ்மாக் துணைப் பொது மேலாளரிடம் அமலாக்கத் துறை தீவிர விசாரணை

சென்னை: டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு புகாா் தொடா்பாக, அந்த நிறுவனத்தின் துணை பொது மேலாளரிடம் அமலாக்கத் துறையினா் திங்கள்கிழமை தீவிர விசாரணை செய்தனா். தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் கடந்த மா... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்கள் 20 லட்சம் பேருக்கு மடிக்கணினி: திட்டத்தை விரைவுபடுத்த துணை முதல்வா் உதயநிதி அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் கல்லூரி மாணவா்கள் 20 லட்சம் பேருக்கு தமிழக அரசின் சாா்பில் மடிக்கணினி வழங்கும் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என பல்வேறு துறை சாா்ந்த அதிகாரிகளுக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்... மேலும் பார்க்க

கோடை விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு

சென்னை: கோடை விடுமுறையையொட்டி ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயா்ந்துள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணி நிமித்தமாக தங்கியிருக்கும் வெளிமாவட்டங்களைச் சோ்ந்தவா்கள், விடுமுறை மற்... மேலும் பார்க்க