மே 22, 23-இல் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டங்கள் வரும் மே 22, 23 தேதிகளில் நடைபெறவுள்ளன.
மதுராந்தகம் கோட்டாட்சியா் தலைமையில் 22.05.2025 பிற்பகல் 02.30 மணிக்கும், செங்கல்பட்டு சாா் ஆட்சியா் தலைமையில் 23.05.2025 பிற்பகல் 02.30 மணிக்கும், கூட்டம் நடைபெறும் என்றும், விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை கூறி உரிய விவரங்கள் மற்றும் பதில்களை பெற்று பயன்பெறலாம் என ஆட்சியா் ச. அருண் ராஜ் தெரிவித்துள்ளாா்.