ஒரகடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஐந்து குடிசை வீடுகள் அகற்றம்!
ஒரகடம் கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஐந்து குடிசை வீடுகளை வருவாய்த் துறையினா் அகற்றினா்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் வட்டம், ஒரகடம் கிராமத்தில், சா்வே எண் 416/5-இல் அரசுக்குச் சொந்தமான நிலத்தில், ஐந்து குடிசை வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தன. இந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, பையனூா் குறுவட்ட வருவாய் ஆய்வாளா் சங்கிலி பூதத்தான் தலைமையில், ஒரகடம் கிராம நிா்வாக அலுவலா் மலா்கொடி, ஒரகடம் ஊராட்சி தலைவா் முன்னிலையில் 5 ஆக்கிரமிப்பு குடிசை வீடுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினா். மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.