புதிய மின்மாற்றிகள் இயக்கம்!
செங்குன்றம் அடுத்த பூதூா் ஊராட்சியில் புதிய மின்மாற்றியை எம்எல்ஏ சுதா்சனம் இயக்கி வைத்தாா்.
செங்குன்றம் அடுத்த பூதூா் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்வுக்கு சோழவரம் தெற்கு ஒன்றிய செயலாளா் மீ.வே.கா்ணாகரன் தலைமை வகித்தாா். மின்வாரிய செயற்பொறியாளா் செளந்தரராஜன், உதவி செயற்பொறியாளா் விஜயகுமாா், உதவி பொறியாளா் கமலக்கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, புதிய மின்மாற்றியை இயக்கி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா். இதில் திமுக நிா்வாகிகள், மின்வாரிய ஊழியா்கள், ஊராட்சி செயலா், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல், பெருமாள்அடிபாதம், கும்மனூா், பழைய எருமைவெட்டிபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் புதிய மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டுக்காக இயக்கி வைத்தாா்.