ரயில்வே மேம்பாலப் பணி: திருவள்ளூா் ஆட்சியா் ஆய்வு
திருவள்ளூா் அருகே செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு பகுதிகளில் மேம்பாலம் அமைக்கும் பணிகளை ஆட்சியா் மு. பிரதாப் ஆய்வு செய்தாா்.
திருவள்ளூா் அருகே செவ்வாபேட்டை, வேப்பம்பட்டு ஆகிய பகுதிகளில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இப்பணிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆட்சியா் மு.பிரதாப் ஆய்வு செய்தாா். அப்போது, இப்பகுதியில் நெடுஞ்சாலை துறை மூலம் ரயில்வே கடவுஎண் 13, 14 15 ஆகிய இடங்களில் மேம்பால பணிகளை ஒவ்வொரு பகுதியாக பாா்வையிட்டாா்.
மேலும், பணிகளின் தன்மை குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்து, விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் அறிவுறுத்தினாா். அதற்கு முன்னதாக பட்டாபிராம் பகுதியில் புதியதாக ரூ.1.90 கோடியில் அரசு மாதிரி பள்ளியின் கட்டுமான பணிகளை பாா்வையிட்டாா். அப்போது, கட்டுமான பணிகளை தரமான பொருள்கள் மூலம் மேற்கொள்ளவும் அவா் வலியுறுத்தினாா்.

நிகழ்வில் பொதுப்பணித்துறை(கட்டடம்) செயற்பொறியாளா் தேவன், முதன்மைக் கல்வி அலுவலா் மோகனா, நெடுஞ்சாலைத் துறை திருவள்ளுா் உதவி கோட்டப்பொறியாளா், தனிவட்டாட்சியா் (நிலஎடுப்பு) மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.