``பொற்கோயில் மீது பாகிஸ்தான் ஏவுகணை ஒன்று கூட தாக்காமல் முறியடித்தோம்'' - விவரிக...
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூரில் விடிய விடிய மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து வருகிறது.
மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் காவிரியின் துணை நதிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக 4-வது நாளாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவுதொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நேற்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 4,764 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து இன்று காலை வினாடிக்கு 6233 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
பிறநாட்டுக்கு பணம் அனுப்பினால் 5% வரி: டிரம்ப்பின் புதிய திட்டத்தால் யாருக்கு பாதிப்பு?
நீர் திறப்பைவிட வரத்து அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நீர் வரத்து அதிகரித்துள்ளதால் நேற்று காலை 108.52 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 108.82 அடியாக சற்று உயர்ந்துள்ளது.
அணையின் நீர் இருப்பு 76.74 டிஎம்சியாக உள்ளது. மேட்டூரில் மழை அளவு 100.6 மி.மீ