செய்திகள் :

"இப்போதைக்கு எங்கள் இலக்கு CSK தான்" - பஞ்சாப்புடனான தோல்விக்குப் பிறகு சஞ்சு சாம்சன்

post image

இந்தியா பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வாரத்துக்கு நிறுத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர், நேற்று முன்தினம் (மே 17) மீண்டும் தொடங்கியது.

இதில், பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்ட ராஜஸ்தான் அணியும், 10 வருடங்களுக்குப் பிறகு பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறத் துடிக்கும் பஞ்சாப் அணியும் நேற்று (மே 18) மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நேஹல் வதேரா 70 ரன்கள் அடித்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ்

அதைத்தொடர்ந்து, 220 என்ற சற்று கடினமான இலக்கை நோக்கிக் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில், ஜெய்ஸ்வால் - வைபவ் சூர்யவன்ஷி கூட்டணி நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தாலும், சஞ்சு சாம்சன், ரியான் பராக், ஹெட்மயர் என அடுத்தடுத்து வந்த வீரர்களின் சொதப்பலால் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

பஞ்சாப் அணி இந்த வெற்றியின் மூலம், 10 வருடங்களுக்குப் பிறகு பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது.

சென்னை அணி உடனான அடுத்த போட்டி..!

தோல்விக்குப் பிறகு பேசிய ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன், "நாங்கள் எங்கள் ஆட்டத்தைச் சிறப்பாகத் துவங்கினோம். துவக்க ஆட்டக்காரர்கள் பவர்பிளேவில் 90 ரன்கள் எடுத்து அசத்தினர்.

இதைத் தாண்டி அவர்களிடமிருந்து பெரிதாக எதையும் எதிர்பார்க்க முடியாது. ஆனால், அந்த வேகத்தைத் தொடர்ச்சியாக எங்களால் எடுத்துச் செல்ல இயலவில்லை.

பிட்ச் மிக வித்தியாசமாக இருந்தது. எங்களிடம் உள்ள அதிரடி ஆட்டக்காரர்களை எண்ணிப் பார்க்கையில் இன்றைய இலக்கு அடையக் கூடியது.

சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்

போட்டியை வெற்றியுடன் முடிக்க சற்று கடினமாக இருந்தது. நாங்கள் அதைச் செய்திருக்க வேண்டும். இரண்டு அனுபவம் மிகுந்த வீரர்கள் தங்களின் கடமையைச் சிறப்பாகச் செய்தனர்.

நிச்சயமாக அடுத்த சீசனில் பல முன்னேற்றங்களைச் செய்தாக வேண்டும். இப்போது பெரிதாக எதையும் முயற்சிக்கவில்லை. எங்களின் முதல் கடமை சென்னை அணி உடனான அடுத்த போட்டியை ஜெயிப்பதே." என்று கூறினார்.

"கோப்பை வென்ற Shreyasக்குப் பாராட்டு இல்லை; ஆனா வெளியே உட்கார்ந்திருந்தவருக்கு..." - கவாஸ்கர் பளீச்

நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலானப் பஞ்சாப் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்க... மேலும் பார்க்க

BCCI: ஆசியக்கோப்பையில் இருந்து விலகும் இந்திய அணி? - பஹல்காம் தாக்குதல்தான் காரணமா?

ஆசிய கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் தொடர்களில் இருந்து விலக பிசிசிஐ ( இந்திய கிரிக்கெட் வாரியம்) முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடு... மேலும் பார்க்க

Sai Sudharsan : 'அந்த 2 விஷயத்தை இன்னும் கத்துக்கணும்!' - ஆட்டநாயகன் சாய் சுதர்சன்

'ஆட்டநாயகன் சாய் சுதர்சன்!'டெல்லிக்கு எதிரான போட்டியை குஜராத் அணி வென்றிருக்கிறது. இந்தப் போட்டியில் குஜராத் சார்பில் தமிழக வீரரான சாய் சுதர்சன் மிகச்சிறப்பாக ஆடி சதமடித்திருந்தார். அவருக்குதான் ஆட்டந... மேலும் பார்க்க

DC vs GT : 'சொல்லியடித்த சாய் சுதர்சன்; துணை நின்ற கில்!' - டெல்லியை ஊதித்தள்ளிய குஜராத்

'குஜராத் வெற்றி!'டெல்லிக்கு எதிரான போட்டியை சுலபமாக வென்றிருக்கிறது குஜராத் டைட்டன்ஸ் அணி. வென்ற கையோடு ப்ளே ஆப்ஸ் சுற்றுக்கும் தகுதிபெற்றிருக்கிறது குஜராத். அந்த அணியின் டாப் 3 வீரர்கள்தான் அவர்களின்... மேலும் பார்க்க

KL Rahul : 'திணறிய டெல்லி; க்ளாஸாக ஆடி சதமடித்த கே.எல்.ராகுல்!

'ராகுல் சதம்!'டெல்லிக்கு கட்டாயம் வென்றே ஆக வேண்டிய போட்டி இது. அதுவும் இந்த சீசனில் மிகச்சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக. ப்ளே ஆப்ஸ் ரேஸில் நீடிக்க வெற்றி தேவையான முக்கி... மேலும் பார்க்க

RR vs PBKS : 'உங்கிட்ட எண்டிங் சரியில்லையேப்பா..' - ராஜஸ்தானை எப்படி வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்?

'ராஜஸ்தான் vs பஞ்சாப்!'மீண்டும் ஐ.பி.எல் தொடங்கிய பிறகு முதல் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. ப்ளே ஆப்ஸ் ரேஸில் இருந்த பஞ்சாபும் ஏற்கனவே தொடரை விட்டு வெளியேறிவிட்ட ராஜஸ்தானும் மோதியிருந்தன.Rajasthan ... மேலும் பார்க்க