செய்திகள் :

திருப்பத்தூர்: விகடன் செய்தி எதிரொலி; சிதிலமடைந்த பேருந்து நிழற்குடை சீரமைப்பு!

post image

திருப்பத்தூர் மாவட்டம், திரியாலம் கிராமத்தின் அருகே மிகவும் சிதிலமடைந்த நிலையிலிருந்த பயணியர் நிழற்குடையால், பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வந்தனர். நாட்றம்பள்ளி, பச்சூர், பர்கூர் உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் இங்கு நின்று பேருந்துகளுக்காகக் காத்திருக்கும் நிலையில், சேதமடைந்த நிழற்குடையைப் பயன்படுத்த முடியாமல் வெளியே நிற்க வேண்டிய நிலை இருந்தது. இது குறித்து பொதுமக்கள் தொடர்ந்து வேதனை தெரிவித்து வந்தனர். இப்பகுதியில் தனியார்ப் பள்ளிகள், அரசு மருத்துவமனை, வங்கிகள் போன்ற முக்கிய நிறுவனங்கள் இருந்தும், நிழற்குடையின் பரிதாப நிலை கவனிக்கப்படாமல் இருந்தது. “நிழற்குடையில் நிற்பது மட்டுமல்ல, அருகே செல்வதற்கே அச்சமாக உள்ளது. எந்த அசம்பாவிதமும் நேரிடும் முன் இதைச் சீரமைக்க வேண்டும்,” என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

பொதுமக்களும் இது குறித்து குமுறிய நிலையில், “பல ஆண்டுகளாக இந்நிலை தொடர்கிறது. உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித மாற்றமும் இல்லை. வார இறுதி நாட்களில் அருகிலுள்ள கடைகள் மூடப்பட்டிருக்கும் போது, வெட்ட வெளியில் நிற்க வேண்டியுள்ளது. சமீபத்தில் ஒரு மாணவி மீது இருசக்கர வாகனம் மோதிய சம்பவமும்... வெயிலும், பாதுகாப்பின்மையும் எங்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அதிகாரிகள் எங்கள் சிரமங்களை கருத்தில் கொண்டு விரைந்து புதிய நிழற்குடை அமைக்க வேண்டும் என்பது எங்களது  முக்கிய கோரிக்கை" என்றனர்.

நமது தரப்பில் இந்த விவகாரம் குறித்து, ஸ்பாட் விசிட் செய்து பொதுமக்களிடம் பேசி மார்ச் 2-ம் தேதி, ``திருப்பத்தூர்: சிதிலமடைந்த பேருந்து நிழற்குடை; அச்சத்தில் பயணிகள்! - சீரமைக்கப்படுமா?" என்ற தலைப்பில் அவர்களின் சிரமங்களைச் சுட்டிக்காட்டியிருந்தோம். விகடன் செய்தி எதிரொலியாக (09/05/2025) அன்று அதிகாரிகள் பொதுமக்களின் நலன் கருதி விரைந்து புதிய பேருந்து நிழற்குடையைக் கட்டியுள்ளார்கள் . ``இனிமேல் நாங்கள் பாதுகாப்பாக நின்று பயணம் மேற்க் கொள்வோம்" என்று இன்முகத்துடன் விகடனுக்கு நன்றி தெரிவித்தனர், பொதுமக்கள்.

`கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவிற்கு மணி மண்டபம் கட்ட விடாமல் தடுக்கிறது திமுக அரசு!' - சசிகலா ஆவேசம்

மறைந்த முன்னாள் முதல்வரின் தோழியும் கொடநாடு ஸ்டேட் பங்குதாரர்களில் ஒருவருமான சசிகலா மூன்று நாள் பயணமாக நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகில் உள்ள கொடநாடு எஸ்டேட்டிற்கு இன்று மாலை வருகைத் தந்துள்ளார். எஸ... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: குவியும் குப்பையால் முகம் சுளிக்கும் பயணிகள்... ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தின் அவலம்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகேயுள்ள கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் மற்றும் கழிவுகள் தேங்கியதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், அருகிலுள்ள ஏலகிரி ஏரியில் மாசுபாடு ஏற்படுவதாகப் ... மேலும் பார்க்க

``டாஸ்மாக் ரெய்டு பயத்தில், அதிமுக-வினர் வீட்டிற்கு லஞ்ச ஒழிப்புத்துறை ஏவல்..'' - இபிஎஸ் காட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ-வும் முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன் குறித்து அவரின் சொந்தக் கிராமமான `சேவூர் மக்கள்’ என்ற பெயரில், கடந்த 2022-... மேலும் பார்க்க

Trump : ட்ரம்ப்பின் புதிய 5% வரி அறிவிப்பு - இந்தியர்களை பாதிக்குமா?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எப்போது என்ன அறிவிப்பாரோ என்ற பீதியில் தான் உலக நாடுகள் இருக்கின்றன என்று கூட கூறலாம். அவர் அதிபராக பதவியேற்றதில் இருந்து வரிசையாக அறிவிப்புகளை அறிவித்து கொண்டே வருகிறார். அவற்... மேலும் பார்க்க

'முதியோர் இருக்கையில் அமரக் கூடாது' - முதியவரை தாக்கிய ஓட்டுநர், நடத்துநர் இடைநீக்கம்!

சென்னை வண்டலூர் அரசு பேருந்து ஒன்றில் முதியவர் ஒருவர் பயணத்திற்காக ஏறியிருக்கிறார். அப்போது அவர் முதியோர் இருக்கையில் அமர்ந்துள்ளார். அவரை அந்த இடத்தில் இருந்து ஓட்டுநரும், நடத்துநரும் இறங்க சொல்லும் ... மேலும் பார்க்க