Ananya Pandey: `கோழி கால்கள், தீக்குச்சி உடல் என கேலி செய்தார்கள்'- ஏளனங்கள் குற...
ஜோ பைடன் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்: பிரதமர் மோடி
புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் அதிபர் பதவியில் இருந்து விலகிய பைடன் சிறுநீர் பிரச்னை தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவரைச் சந்தித்தார். அப்போது அவருக்குத் தீவிரமான புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த புற்றுநோய் அவரின் எலும்புகளுக்கும் பரவியுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பைடனும், அவரது குடும்பத்தினரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களுடன் தொடர்ந்து ஆலோசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனின் உடல்நிலை குறித்துக் கேள்விப்பட்டு மிகவும் கவலையடைந்தேன். அவர் விரைவாகவும், முழுமையாகவும் குணமடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
புரோஸ்டேட் புற்றுநோய் மிகவும் பொதுவானது என்றும் வயதாகும்போது, பெரும்பாலான ஆண்களுக்கு புற்றுநோய் செல்கள் சிறியதளவில் இருக்கும் என்றும் ஆர்லாண்டோ சிறுநீரக மருத்துவர் மற்றும் ரோபோடிக் அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜமின் பிரம்பட் கூறினார்.