தக் லைஃப் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்! கால அளவு என்ன?
தக் லைஃப் திரைப்படத்தின் சென்சார் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் கமல்ஹாசன் - இயக்குநர் மணிரத்னம் கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளதால் முதல் நாள் வணிகம் பெரியளவிலேயே நடைபெறும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இப்படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும் படத்தின் கால அளவு 2.45 மணி நேரம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: கில் ரீமேக்கில் துருவ் விக்ரம்?