சிறந்த செயல்திறனுக்காக `சன்சத் ரத்னா விருது' - திமுக எம்.பி. உள்பட 17 பேர் தேர்வு! - முழு விவரம்!
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறந்த செயல்திறனை மதிப்பளிக்கும் விதமாக சன்சத் ரத்னா விருது வழங்கப்படுகிறது. இந்த விருது 2010-ம் ஆண்டு முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பரிந்துரையின்படி, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட Prime Point Foundation அமைப்பால் நிறுவப்பட்டது.

இந்த விருதுக்கு தகுதியானவர்கள் நாடாளுமன்றத்தில் விவாதங்களில் பங்கேற்பது, மசோதா தாக்கல், கேள்விகள் எழுப்புதல் போன்ற செயல்திறன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
இந்த விருதுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்ய, தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் (NCBC) ஆணையத்தின் தலைவர் ஹன்ஸ்ராஜ் அஹிர் தலைமையில், ஜூரி குழு செயல்படுகிறது.
அதன் அடிப்படையில் இந்த ஆண்டு 17 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 2 நாடாளுமன்ற நிலைத் துறை குழுக்கள் இந்த விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
விருதுபெரும் எம்பிகள்
சுப்ரியா சூலே (NCP-SP, பரமதி)
ஸ்ரீரங் அப்பா பார்னே (சிவசேனா, மாவல்)
மெதா குல்கர்னி (பா.ஜ.க, ராஜ்யசபா)
வர்ஷா கைக்வாட் (காங்கிரஸ், மும்பை)
ஸ்மிதா உதய் வாங் (பா.ஜ.க)
அர்விந்த் கண்பத் சாவந்த் (சிவசேனா UBT)

நரேஷ் கண்பத் மாஸ்கே (சிவசேனா)
பர்த்ருஹரி மஹ்தாப் (பா.ஜ.க, ஒடிசா)
என். கே. பிரேமச்சந்திரன் (RSP, கேரளா)
பி. பி. சௌதரி (பா.ஜ.க, ராஜஸ்தான்)
மதன் ராதோர் (பா.ஜ.க, ராஜஸ்தான்)
நிஷிகாந்த் டுபே (பா.ஜ.க, ஜார்க்கண்ட்)
பிரவீன் படேல் (பா.ஜ.க)
பித்யுத் பரன் மஹதோ (பா.ஜ.க)
சீ. என். அண்ணாதுரை (தி.மு.க, தமிழ்நாடு)
திலீப் சாய்க்கியா (பா.ஜ.க, அசாம்)
ரவிக் கிஷன் (பா.ஜ.க, உத்தரப் பிரதேசம்)
நாடாளுமன்ற நிலைத்துறை குழுக்கள்:
நிதி நிலைத்துறை குழு (தலைவர்: ஜெயந்த் சின்ஹா)
விவசாய நிலைத்துறை குழு (தலைவர்: அடி கவுதர்)
போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாச்சாரம் நிலைத்துறை குழு (தலைவர்: விஜய்சாய் ரெட்டி)
இந்த சன்சத் ரத்னா விருது விழா, ஜூலை மாத இறுதியில் டெல்லியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.