செய்திகள் :

Rain: `மீட்புக் குழு தயார் நிலையில் இருக்கும்; மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்’ - ஸ்டாலின்

post image

தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னைத் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.

rain alert
rain alert

தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது

தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “ தென்மேற்கு பருவ மழையை எதிர்கொள்ளத் தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நிலச்சரிவைத் தடுக்க முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கப்படும். பேரிடர் மீட்புக் குழுக்களைத் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தி இருக்கிறேன்.

மழைக் காலத்தில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அரசு வெளியிடும் வானிலை எச்சரிக்கையும், முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களையும் பின்பற்ற வேண்டும்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

எந்தவொரு அவசர சூழ்நிலையிலும் மக்கள் உதவி பெறுவதற்காக மாநில மற்றும் மாவட்ட அளவிலான கட்டுபாட்டு அறைகள் 24 மணி நேரமும் செயல்படும்" என்றும் உறுதி அளித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

சாதிவாரிக் கணக்கெடுப்பு : `மு.க.ஸ்டாலின் தவற விட்ட வாய்ப்பு’ - தோழர் தியாகு | பகுதி 1

எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான்,`களம்’இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: `ஜெய்சங்கரின் மௌனம் மிகவும் மோசமானது; தேசத்துக்கு உண்மை...' - ராகுல்

சமீபத்திய பேட்டி ஒன்றில், 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், "நாங்கள் ஆபரேஷனை தொடங்குவதற்கு முன்பு பாகிஸ்தானுக்கு, 'நாங்கள் தீவிரவாத தளவாடங்களை அழிக்க உள்ளோம். பா... மேலும் பார்க்க

`பல பெண்களை ஏமாற்றியிருக்கிறான்; அவன் சுயரூபம்...’ - திமுக இளைஞரணி நிர்வாகி மீது மாணவி பகீர் புகார்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் காவனூர் பெரியத் தெருவைச் சேர்ந்தவர் தெய்வா என்கிற தெய்வச்செயல். இவர் தி.மு.க இளைஞரணியில் அரக்கோணம் மத்திய ஒன்றிய துணை அமைப்பாளராகவும், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன... மேலும் பார்க்க

நாம் தமிழர் நிகழ்ச்சிக்காக கோவை பொருட்காட்சியில் அனுமதி இலவசமா... சீமானின் புகாரும் அரசு விளக்கமும்!

நாம் தமிழர் கட்சி சார்பில், தமிழினப் பேரெழுச்சிப் பொது கூட்டம் கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் சீமான், “மே 18 துயரம் மிகுந்த நாள். மே 18-ம் தேதி தமிழ... மேலும் பார்க்க

'திரும்ப வந்துட்டேனு சொல்லு... 2026 தேர்தலில் தனித்து போட்டி’ - சீமான் அறிவிப்பு

2009 ஆம் ஆண்டு இலங்கையில், தமிழ் ஈழ மக்கள் இனப்படுகொலைச் செய்யப்பட்டதை நினைவு கூறும் விதமாக நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழின எழுச்சிப் பொதுக்கூட்டம் கோவை கொடிசியா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிக... மேலும் பார்க்க