திருப்பதி கோயிலுக்கு.. மைசூர் அரச குடும்பத்தினர் 100 கிலோ வெள்ளி விளக்கு நன்கொடை...
பருவமழை முன்னேற்பாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறுகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணியளவில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தலைமை செயலர், அதிகாரிகள் பங்கேற்க உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை மே 27-ஆம் தேதி கேரளத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் கேரளத்தில் ஜூன் 1-இல் தொடங்கும். நிகழாண்டில், வழக்கத்தைவிட 4 நாள்களுக்கு முன்னதாக தொடங்குவதற்கு சாதக சூழல்கள் உள்ளது.
இதனிடையே அடுத்த 6 நாள்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.