செய்திகள் :

சோலாப்பூர் துணி மில்லில் அதிகாலையில் தீ விபத்து: மில் அதிபர், பேரன் உட்பட 8 பேர் உயிரிழப்பு!

post image

மகாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூர் அருகில் உள்ள அக்கல்கோடில் சென்ட்ரல் டெக்ஸ்டைல் மில் இருக்கிறது. இத்தொழிற்சாலையில் அதிகாலை 3.45 மணிக்கு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 100 தண்ணீர் டேங்கர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. 13 மணி நேரம் போராடிய பிறகே தீயை அணைக்க முடிந்தது. இத்தீவிபத்தில் 3 பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இத்தீவிபத்தில் டெக்ஸ்டைல் மில் உரிமையாளர் உஸ்மான்(80) மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 3 பேர் உயிரிழந்தனர். அவர்களது உடல் மில்லில் இருந்த படுக்கை அறையில் இருந்து மீட்கப்பட்டது. தீவிபத்தில் ஒன்றரை வயது யூசுப் என்ற குழந்தை தனது தாயின் கையில் இருந்தபடி உயிரிழந்திருந்தது. அனைவரும் தொழிற்சாலையில் உறங்கிக்கொண்டிருந்தபோது இந்த தீவிபத்து ஏற்பட்டதால் அவர்களால் வெளியில் தப்பிக்க முடியவில்லை.

இத்தீவிபத்தில் தீக்காயத்தால் 3 பேர் உயிரிழந்திருந்தனர். மற்ற 5 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்திருந்தனர். தீயணைப்புத்துறையினர் முதலில் 3 பேரின் உடலை மீட்டனர். அதன் பிறகு 13 மணி நேர போராட்டத்திற்கு பிறகே எஞ்சிய 5 பேரின் உடல்களை தீயணைப்புத்துறையினரால் மீட்க முடிந்தது. தீவிபத்து ஏற்பட்டவுடன் 5 பேரும் தங்களை பாதுகாத்துக்கொள்ள படுக்கை அறைக்குள் ஓடியதாகவும், ஆனால் கரும்புகை சூழ்ந்ததால் அவர்களால் மூச்சுவிட முடியாமல் இறந்துவிட்டதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.

இதில் தீயணைப்புத்துறை வீரர்கள் 3 பேரும் காயம் அடைந்தனர். மின்கசிவு காரணமாக இத்தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. இத்தீவிபத்து குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர்: உரிமம் பெறாத பட்டாசு ஆலை வெடித்து 2 பேர் பலி - ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டம் நெய்வேலி தென்பாதி கிராமத்தை சேர்ந்தவர் சர்புதீன் இவர் விழாக்களில் பயன்படுத்தப்படும் பட்டாசு விற்பனை செய்து வந்தார். நாட்டு வெடி தயாரிப்பில் ஈடுபட்டு வந்த இவரது மகன் அப்பாஸ் வெளிநாடு... மேலும் பார்க்க

Charminar Fire Accident: ஹைதராபாத் சார்மினார் அருகே தீ விபத்து; 17 பேர் உயிரிழப்பு; பிரதமர் இரங்கல்

ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள ஒரு வணிக வளாகத்தில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஒன்று ஏற்பட்டிருக்கிறது. இன்று காலை 5.30 மணிக்கு இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. விபத்தில் மொத்தமாக 17 நபர்கள் உ... மேலும் பார்க்க

`டயர் வெடித்து கட்டுபாட்டை இழந்த வாகனம்' சாலையோர கிணற்றுக்குள் பாய்ந்ததில் 5 பேர் பலியான பரிதாபம்

கோவை மாவட்டம், சங்கியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மோசஸ். இவர், தன் மனைவி வசந்தா மற்றும் உறவினர்களான கோயில் பிச்சை அவரின் மனைவி லெற்றியா கிருபா, மோசஸின் மகன் கெர்சோம், அவரின் மனைவி சைனி கிருபா, கெர்ச... மேலும் பார்க்க

சென்னை: திடீரென உள்வாங்கிய சாலை; கார் கவிழ்ந்து விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் சொல்வது என்ன?

சென்னைமத்திய கைலாஷிலிருந்து தரமணி செல்லும் பிரதான சாலையில் டைடல் பார்க் அமைந்துள்ளது.நேற்று மாலை சுமார் 5 மணியளவில் இந்த டைடல் பார்க் முன்பாக செல்லும் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது.அந்தப் பள்ளத்தி... மேலும் பார்க்க

மது போதையில் தாறுமாறாக ஓடிய அரசுப் பேருந்து; பயணிகள் கதறல்.. சீட்டில் மட்டையான ஓட்டுநர்

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இருந்து இன்று காலை ஒரு அரசுப் பேருந்து சிவகாசிக்கு புறப்பட்டது. இந்தப் பேருந்தை விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தஓட்டுநர் அருள் மூர்த்தி என்பவர் ஓட்டிச் சென்றார்.அதில் சுமா... மேலும் பார்க்க

'படுகாயமடைந்த குழந்தையும் இறந்தது' - நெல்லை கார் விபத்தில் சிக்கிய முழு குடும்பமும் பலியான சோகம்!

கன்னியாகுமரி மாவட்டம், இரணியலை அடுத்த மைலோடு சரல்விளை கிராமத்தைச் சேர்ந்தவர் தனிஸ்லாஸ் (68). கட்டடம் கட்டும் காண்டிராக்டர். இவரது மனைவி மார்கிரேட் மேரி (57). இவர்கள் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு திரு... மேலும் பார்க்க