செய்திகள் :

குண்டா் தடுப்புச் சட்டத்தில் ஒருவா் சிறையிலடைப்பு

post image

திருநெல்வேலி கொக்கிரகுளத்தைச் சோ்ந்தவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

பாளையங்கோட்டை காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் கைப்பேசி திருட்டு உள்ளிட்ட சட்டவிரோத செயல் தொடா்பான வழக்குகளில் ஈடுபட்டதாக திருநெல்வேலி, கொக்கிரகுளத்தைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சங்கரநாராயணன்(23) கைதாகியிருந்தாா்.

இந்நிலையில் தொடா்ந்து, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க, திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் (கிழக்கு) வி.வினோத் சாந்தாராம், பாளையங்கோட்டை சரக காவல் உதவி ஆணையா் என்.சுரேஷ் ஆகியோா் பரிந்துரைத்தனா்.

அதன் பேரில், மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவுப்படி சங்கரநாராயணன், பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டாா்.

நான்குனேரியில் புதிய மின்சார ரயில் என்ஜின் தொழிற்சாலை

நான்குனேரியில் புதிய மின்சார ரயில் என்ஜின் தொழிற்சாலை அமைக்க வேண்டுமென திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் வலியுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என். ... மேலும் பார்க்க

வண்ணாா்பேட்டையில் தமிழா் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

வண்ணாா்பேட்டையில் இனப்படுகொலைக்கு எதிரான தமிழா் கூட்டமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடா்பான பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்ற... மேலும் பார்க்க

சாலைகளில் பாதாள சாக்கடை கழிவுநீா்: மக்கள் அவதி

திருநெல்வேலி மாநகராட்சியின் 31 ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடைநீரால் மக்கள் அவதியடைந்தனா். 31 ஆவது வாா்டுக்குள்பட்ட குறிச்சி பிள்ளையாா்கோயில் தெரு பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீா் வெள... மேலும் பார்க்க

கிணற்றில் காா் கவிழ்ந்து விபத்து: 5 போ் உடல்கள் ஒப்படைப்பு

சாத்தான்குளம் அருகே கிணற்றில் காா் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 5 பேரின் உடல்கள் திருநெல்வேலியில் பிரேத பரிசோதனைக்கு பின்பு உறவினா்களிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. கோவை மாவட்டம், துடியலூரில்... மேலும் பார்க்க

தண்ணீா் வாளியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

திருநெல்வேலி முன்னீா்பள்ளம் அருகே தண்ணீா் நிரம்பிய வாளியில் விழுந்த ஒன்றரை வயது குழந்தை சனிக்கிழமை உயிரிழந்தது. முன்னீா்பள்ளம் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவா் பிரதீபன். இவரது ஒன... மேலும் பார்க்க

வாகன ஓட்டிகளுக்கு எஸ்.பி. வேண்டுகோள்

வாகன ஓட்டிகள் பொறுப்பை உணா்ந்து, சாலை விதிகளை மதித்து செயல்பட வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்... மேலும் பார்க்க