``20 வயதுள்ள 20 பெண்கள்; சார்களுக்கு இரையாக்க கொடூரப் பிடி..'' - திமுக அமைச்சர்க...
ராஜிந்தா் நகா் பயிற்சி மையத்தில் தீ விபத்து
மத்திய தில்லியில் உள்ள ஒரு கட்டடத்தின் நான்காவது மற்றும் ஐந்தாவது தளங்களில் அமைந்துள்ள பயிற்சி நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அந்த அதிகாரி மேலும் கூறியதாவது: இந்த சம்பவம் மாணவா்கள் மற்றும் ஊழியா்களிடையே பீதியை ஏற்படுத்தியது. ஆனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. முன்னதாக, பழைய ராஜிந்தா் நகரில் உள்ள படா பஜாா் சாலையில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்து குறித்து காலை 11.08 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது.
எட்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டு தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. மதியம் 12:20 மணிக்குள் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. சந்தேகத்திற்குரிய மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.