செய்திகள் :

கோவை: திடீரென உடல் நலம் பாதித்த பெண் யானை - பரிதவித்த குட்டி யானை

post image

கோவை மருதமலை அடிவாரத்தில் ஒரு தாய் யானையும், அதன் குட்டியும் நீண்ட நேரம் அசையாமல் நின்று கொண்டிருப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றபோது, தாய் யானை உடல்நலக் குறைவு காரணமாக மயங்கி விழுந்தது தெரியவந்தது.

தாய் யானை, குட்டி யானை

குட்டி யானை தன் தாயுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் தவித்தது. நீண்ட நேரம் தும்பிக்கையால் தாயின் உடலைத் தட்டி எழுப்ப முயற்சி செய்தது.

உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்த யானைக்கு ஆனைமலை புலிகள் காப்பக வனக் கால்நடை மருத்துவர் விஜயராகவன் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனக் கால்நடை மருத்துவர் சதாசிவம் ஆகியோர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

யானை சிகிச்சை

மேலும், பெண் யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக, துரியன் என்கிற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது. மருத்துவக் குழுவினர் யானைக்கு சிகிச்சையளித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

விரைவில் யானை குணம் அடைந்துவிடும்!

இதுகுறித்து கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறுகையில், " உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் யானை குணம் அடைந்து வனப் பகுதிக்குள் செல்வதற்கு வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

கும்கி யானை உதவியுடன் சிகிச்சை

யானை நிற்கவே முடியாத நிலையில் இருந்து, தற்போது தானாக நிற்கும் நிலைக்கு வந்துள்ளது. அதன் குட்டி யானை வனப்பகுதிக்குள் வேறு ஒரு கூட்டத்துடன் சென்றுள்ளது. வனத்துறை ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்."என்றார்.

Smart Water ATM : சென்னையில் விரைவில் பயன்பாட்டுக்கு வரவிருக்கும் `தண்ணீர் ஏடிஎம்’

Smart Water ATMSmart Water ATMSmart Water ATMSmart Water ATMSmart Water ATMSmart Water ATMSmart Water ATMSmart Water ATMSmart Water ATMSmart Water ATMSmart Water ATMSmart Water ATM மேலும் பார்க்க

மண்ணுக்குள் 16 வருடம்; வேர்கள் ஊட்டும் தாய்ப்பால்; காட்டின் சிம்பொனி - சில்வண்டுகளின் வாழ்க்கை!

இயற்கை சூழ்ந்த பகுதியில் ஒரு ரிசார்ட். மாலையில் சிறிது நேரம் மழை பெய்து மண்ணை குளிர வைத்திருந்தது. அந்த ரிசார்ட்டில் கோடை விடுமுறையைக் கொண்டாட தங்கியிருந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பொடிசுகள், நீச்சல்... மேலும் பார்க்க

61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம்: படகுகளை பழுது பார்க்கும் பணியில் மீனவர்கள் தீவிரம்!

படகுகளை பழுது பார்க்கும் பணிபடகுகளை பழுது பார்க்கும் பணிபடகுகளை பழுது பார்க்கும் பணிபடகுகளை பழுது பார்க்கும் பணிபடகுகளை பழுது பார்க்கும் பணிபடகுகளை பழுது பார்க்கும் பணிபடகுகளை பழுது பார்க்கும் பணிபடகு... மேலும் பார்க்க

கன்னியாகுமரி: சித்திரா பௌர்ணமி அபூர்வ காட்சி... சூரியன் அஸ்தமனத்தில் உதயமான முழு நிலவு | Photo Album

கண்ணகி தரிசனம்!Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxsவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின்... மேலும் பார்க்க

திமிங்கலத்தின் சிறுநீரால் கடலுக்கு இவ்வளவு நன்மைகளா? - ஆராய்ச்சியாளர்களின் ஆச்சர்ய தகவல்கள்!

திமிங்கலத்தின் சிறுநீரால் கடல் நீருக்கு அதிகமான நன்மைகள் கிடைப்பதாகவும், இதனால் கடல் வாழ் உயிரினங்களின் உணவு சங்கிலி பாதுகாக்கப்படுவதாகவும் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.பூமியின் மேற்பரப்பு சுமார்... மேலும் பார்க்க

நாகர்கோவில் டவுண் ரயில் நிலையம்: காலை இளம் கதிரில் கதிரவன், இயற்கை காட்சிகள்.. | Photo Album

நாகர்கோவில் டவுண் ரயில் நிலையம்நாகர்கோவில் டவுண் ரயில் நிலையம் மேலும் பார்க்க