செய்திகள் :

மண்ணுக்குள் 16 வருடம்; வேர்கள் ஊட்டும் தாய்ப்பால்; காட்டின் சிம்பொனி - சில்வண்டுகளின் வாழ்க்கை!

post image

யற்கை சூழ்ந்த பகுதியில் ஒரு ரிசார்ட். மாலையில் சிறிது நேரம் மழை பெய்து மண்ணை குளிர வைத்திருந்தது. அந்த ரிசார்ட்டில் கோடை விடுமுறையைக் கொண்டாட தங்கியிருந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பொடிசுகள், நீச்சல் குளத்தில் கும்மாளம் அடித்துக்கொண்டிருந்தார்கள். இரவு ஏழு மணி இருக்கும். திடீரென்று, ரிசார்ட்டின் சுற்றுப்புறத்திலிருந்து அந்த சத்தம் வர ஆரம்பித்தது. நேரம் ஆக ஆக அந்தச் சத்தம் அதிகமாக, நீச்சல் குளத்தில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் 'அது என்ன சத்தம்' என்று கேட்டு பயப்பட ஆரம்பித்தார்கள். 'அதுவொரு பூச்சியோட இரைச்சல்தான்' என்று சொன்னதும், பயம் போய் மறுபடியும் விளையாட ஆரம்பித்துவிட்டார்கள். அந்தப் பூச்சியின் பெயர் சில்வண்டு. சுவர்க்கோழி, சீரிகை, சிதடிப்பூச்சி, மலைக்குருவி என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிற சில்வண்டின் வாழ்க்கையைப்பற்றி தான், சூழலியல் ஆர்வலரும் எழுத்தாளருமான கோவை சதாசிவம் தற்போது விவரிக்கவிருக்கிறார்.

சில்வண்டு
சில்வண்டு

''பார்ப்பதற்கு பெரிய சைஸ் ஈ போல இருக்கும் சில்வண்டுகள், மரப்பட்டைகளின் மேல் கிட்டத்தட்ட அதே நிறத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும். இவை சித்திரை, வைகாசியில் ரீங்காரமிட்டால் கோடை மழை நிச்சயம் என்பார்கள் விவசாயிகள். ஒரு காட்டில் ஆயிரக்கணக்கான சில்வண்டுகள் ரீங்காரமிட்டால், அந்தக் காடு மனிதர்களின் ஊருடுவல் இல்லாமல், அதன் இயல்பு கெடாமல் இருக்கிறது என்று அர்த்தம். சில்வண்டுகளின் ரீங்காரச்சத்தம் குறைவாகக் கேட்டாலோ, அந்தக் காடு அழிந்துக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

சில்வண்டுகள் ஒருநாள் மட்டுமே உயிர் வாழும்; இரவெல்லாம் கத்திக்கத்தி உடல் வெடித்து செத்துவிடும் என்றெல்லாம் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்த நம்பிக்கைகளில் எந்த உண்மையும் இல்லை. 'அப்படியென்றால், உண்மைதான் என்னவென்றால்' இதோ சொல்கிறேன்'' என்றவர், தொடர்ந்தார்.

மண்ணானது, தன்மேல் விழுகிற எல்லாவற்றையும் செரித்து மட்கிப்போக செய்யும். ஆனால், அதன் மேல் விழுந்து புதையுறும் விதைகளையும் மண்புழு, பிள்ளைப்பூச்சி, சில்வண்டு போன்ற சிற்றுயிர்களை மண் செரிப்பதே இல்லை.

''ஒரு பெண் சில்வண்டு, மரப்பட்டைகளில் தன்னுடைய முட்டைகளை இட்டு விட்டு சென்று விடும். முட்டைகளை பாதுகாக்கும் பொறுப்பு இயற்கைக்குத்தான். பார்ப்பதற்கு சீரக சம்பா அரிசியை அடுக்கி வைத்ததுபோல இருக்கும் இந்த முட்டைகள் மழைத்துளிகளில் வழுக்கிக்கொண்டு மண்ணுக்குள் சென்றுவிடும். மண்ணுக்குள்ளேயே பொரிந்து, புழுவாகி, மரங்களுடைய வேர்களின் சாற்றை தாய்ப்பாலாக அருந்தி மண்ணுக்குள்ளேயே வாழும். எத்தனை வருடங்கள் வாழும் தெரியுமா? பத்திலிருந்து பதினாறு வருடங்கள் வரை... அத்தனை வருடங்களும் சில்வண்டுகளுடையது எந்த சத்தமும் அற்ற மண்ணடி வாசம் தான்.

அதன்பிறகு ஒருநாள், அவை மண்ணுக்கு மேலிருக்கும் உலகைக் காண வெளியே வரும். அந்த நாள் மழை வருவதற்கான நாளுக்கு வெகு அருகாமையில் இருக்கும். அப்படி வெளிவந்தவை ஒருவாரமோ, பத்து நாளோ தான் இருக்கும். அந்த நாட்களில் சில்வண்டுகள் இரவு முழுக்க ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கும். சில்வண்டுகளின் இந்த ரீங்காரம் தான் ஒரு காட்டின் சிம்பொனி இசை. இந்த சிம்பொனிதான் ஆண் சில்வண்டுகள் பெண் சில்வண்டுகளுக்கு அனுப்புகிற காதல் தூது. காற்றை உள்வாங்கி, தன் வயிற்றின் கீழே இருக்கிற இசைப்பேழை போன்ற பகுதிக்கு அனுப்பி, ரீங்காரத்தை எழுப்பும் ஆண். இந்த இசையைக் கேட்டு அதன் இணை வந்து சேரும். விடாமல் பெருங்குரலெடுத்து ரீங்காரம் செய்யும் ஆண்பூச்சியை நோக்கியே பெண் பூச்சி வரும். ஒருவாரமோ, பத்து நாளோ அதற்குள் ஆண்-பெண் சேர்க்கை முடிந்ததும், இரண்டும் அதனதன் போக்கில் சென்றுவிடும். அதன்பின் அவையிரண்டும் சந்தித்துக்கொள்வதில்லை.

கோவை சதாசிவம்
கோவை சதாசிவம்

நான் ஏற்கெனவே சொன்னதுபோல, பெண் சில்வண்டு மரப்பட்டைகளில் முட்டையிட்டு விட்டுச் செல்ல, மழை அவற்றை மண்ணுக்குள் புதைத்து வைக்க, அந்த முட்டைகள் புழுவாகி, பூச்சியாகி மண்ணுக்குள் 10 முதல் 16 வருடங்கள் வாழ்ந்து, பிறகொரு மழைக்காலத்தில் இனப்பெருக்கம் செய்ய வெளியே வரும். ஒன்று கவனித்தீர்களா..? மண்ணானது, தன்மேல் விழுகிற எல்லாவற்றையும் செரித்து மட்கிப்போக செய்யும். ஆனால், அதன் மேல் விழுந்து புதையுறும் விதைகளையும் மண்புழு, பிள்ளைப்பூச்சி, சில்வண்டு போன்ற சிற்றுயிர்களை மண் செரிப்பதே இல்லை. மண்ணுக்குத் தெரியும், இந்தச் சிற்றுயிர்கள்தான் தன்னை உயிர்ப்பாக வைத்திருப்பவை என்று.

இனி, சில்வண்டுகளின் ரீங்காரம் கேட்டால் இன்னும் சில நாட்களில் மழை வரப்போகிறது என்பதை அது உங்களுக்கு சொல்கிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள். ஆயிரக்கணக்கான சில்வண்டுகள் ஒரு சேர குரல் கொடுக்கும் கூட்டு இசைக்கு உங்கள் பிள்ளைகள் பயந்தால், அதுதான் காட்டின் சிம்பொனி என்று சொல்லிக் கொடுங்கள்'' என்கிறார் கோவை சதாசிவம்.

61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம்: படகுகளை பழுது பார்க்கும் பணியில் மீனவர்கள் தீவிரம்!

படகுகளை பழுது பார்க்கும் பணிபடகுகளை பழுது பார்க்கும் பணிபடகுகளை பழுது பார்க்கும் பணிபடகுகளை பழுது பார்க்கும் பணிபடகுகளை பழுது பார்க்கும் பணிபடகுகளை பழுது பார்க்கும் பணிபடகுகளை பழுது பார்க்கும் பணிபடகு... மேலும் பார்க்க

கன்னியாகுமரி: சித்திரா பௌர்ணமி அபூர்வ காட்சி... சூரியன் அஸ்தமனத்தில் உதயமான முழு நிலவு | Photo Album

கண்ணகி தரிசனம்!Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxsவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின்... மேலும் பார்க்க

திமிங்கலத்தின் சிறுநீரால் கடலுக்கு இவ்வளவு நன்மைகளா? - ஆராய்ச்சியாளர்களின் ஆச்சர்ய தகவல்கள்!

திமிங்கலத்தின் சிறுநீரால் கடல் நீருக்கு அதிகமான நன்மைகள் கிடைப்பதாகவும், இதனால் கடல் வாழ் உயிரினங்களின் உணவு சங்கிலி பாதுகாக்கப்படுவதாகவும் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.பூமியின் மேற்பரப்பு சுமார்... மேலும் பார்க்க

நாகர்கோவில் டவுண் ரயில் நிலையம்: காலை இளம் கதிரில் கதிரவன், இயற்கை காட்சிகள்.. | Photo Album

நாகர்கோவில் டவுண் ரயில் நிலையம்நாகர்கோவில் டவுண் ரயில் நிலையம் மேலும் பார்க்க

Mudumalai: 'அண்ணன பாத்தியா...' - குழந்தையாக மாறிய கும்கி யானை; கொட்டும் மழையில் குதூகலம்!

ஆசியாவின் மிகப் பழமையான மற்றும் சிறப்பு வாய்ந்த வளர்ப்பு யானை முகாம்களில் ஒன்றாக இருக்கிறது நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம்.நூற்றாண்டுகளைக் கடந்து இயங்கி வரும் இந... மேலும் பார்க்க

ஊட்டிக்குள் முதல் முறையாக நுழைந்த யானை; குழப்பத்தில் தடுமாறும் வனத்துறை! - என்ன நடக்கிறது?

ஆசிய யானைகளின் மிக முக்கிய வாழிடங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம். வளர்ச்சி என்கிற பெயரில் அரசு மற்றும் தனியார் தரப்பில் 200 ஆண்டுகளாக நீலகிரியில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட... மேலும் பார்க்க