சிவகிரி தம்பதி கொலை வழக்கில் 4 பேர் கைது: பல்லடம் கொலையிலும் 3 பேருக்கு தொடர்பு ...
ஆந்திரம்: காருக்குள் சிக்கிய 4 குழந்தைகள் மூச்சுத் திணறி பலி
ஆந்திரத்தில் காருக்குள் சிக்கிய 4 குழந்தைகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், துவாரபுடி கிராமத்தில் இரண்டு நாள்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத ஒருவர் தனது காரை நிறுத்தியிருக்கிறார். கார் பூட்டப்பட்டுள்ளதா என்பதை அவர் சரிபார்க்க தவறிவிட்டதாகக் கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த நான்கு குழந்தைகள் மழை காரணமாக காரைத் திறந்து உள்ளே நுழைந்தனர்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக, காரின் கதவு தற்செயலாக பூட்டிக்கொண்டது. கதவைத் திறந்து குழந்தைகளால் வெளியேற முடியாததால் அவர்கள் அனைவரும் கடுமையான வெப்பத்தாலும், ஆக்ஸிஜன் பற்றாக்குறையாலும் மூச்சுத் திணறி பலியாகினர். இதனிடையே அவர்களின் குடும்பத்தினர் குழந்தைகளைத் தேடியுள்ளனர்.
மூன்று மணி நேரத்திற்கும் மேலாக எங்கு தேடியும் குழந்தைகள் இல்லாததால் குடும்பத்தினர் மாலையில் அவர்களை காரில் கண்டுபிடித்தனர். காரின் ஜன்னல்களை உடைத்து குழந்தைகளை மீட்டனர். எனினும், மூச்சுத் திணறல் காரணமாக நான்கு பேரும் ஏற்கெனவே பலியாகினர். பலியான குழந்தைகள் உதய் (8), சாருமதி (8), கரிஷ்மா (6), மற்றும் மனஸ்வினி (6) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புற்றுநோய்
அனைவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அதில், சாருமதி மற்றும் கரிஷ்மா உடன் பிறந்தவர்கள். உள்ளூர்வாசிகள் அளித்த தகவலின் பேரில், விஜயநகரம் கிராமப்புற போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரின் உரிமையாளரை அடையாளம் காண விசாரணையைத் தொடங்கினர்.
சடலங்கள் மீட்க்கப்பட்டு உடற்கூராய்வுக்காக விஜயநகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.