மகாராஷ்டிரத்தில் வறண்ட ஆற்றுப் படுகையில் விழுந்த கார்: 5 பேர் பலி
மகாராஷ்டிரத்தில் வறண்ட ஆற்றுப் படுகையில் கார் விழுந்ததில் 5 பேர் பலியானார்கள்.
மகாராஷ்டிர மாநிலம், ரத்னகிரி மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை வேகமாக வந்த கார் வறண்ட ஆற்றுப் படுகையில் விழுந்தது. இந்த விபத்தில் 5 பேர் பலியானார்கள். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.
கெட் காவல் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
பலியானவர்கள் மிதாலி விவேக் மோர் (43), மேகா பரத்கர் (22), சௌரப் பரத்கர் (22), நிஹார் மோர் (19) மற்றும் ஷ்ரேயாஸ் சாவந்த் (23) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், கெட் அருகே அதிகாலை 5.45 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.
தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்!
கார் முதலில் சாலையின் தடுப்பில் மோதி ஜக்புடி ஆற்றின் வறண்ட ஆற்றுப் படுகைக்குள் விழுந்தது. ஆற்றில் தண்ணீர் வறண்டு இருந்ததால், கார் பாறைகளில் மோதியதில் அதில் இருந்த சிலர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
காயமடைந்தவர்கள் ரத்னகிரியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
பால்கர் மாவட்டத்தில் உள்ள நல்லசோபராவிலிருந்து தேவ்ருக் நகரை நோக்கி கார் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.