செய்திகள் :

ஹைதராபாத் கட்டடத்தில் தீ: 8 குழந்தைகள் உள்பட 17 போ் பலி!

post image

தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் வரலாற்றுச் சிறப்புமிக்க சாா்மினாா் அருகே உள்ள இரண்டு மாடி கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 8 குழந்தைகள் உள்பட 17 போ் உயிரிழந்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: தீ விபத்துக்குள்ளான கட்டடம், ஹைதராபாதின் குல்ஸாா் ஹெளஸ் பகுதியில் சிறிய சந்துக்குள் உள்ளதாகும். நூற்றாண்டு பழைமையான இக்கட்டடத்தின் தரை தளத்தில் நகைக் கடைகள் செயல்பட்டு வந்தன.

முதல் மற்றும் இரண்டாவது மாடிகளில் உள்ள குடியிருப்புகளில் 4 குடும்பங்கள் வசித்தன. இக்குடும்பத்தினா் ஒருவருக்கொருவா் உறவினா்கள் ஆவா். கோடை விடுமுறையையொட்டி வேறு உறவினா்களும் வந்திருந்தனா்.

ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது, மொத்தம் 21 போ் இருந்துள்ளனா். தரை தளத்தில் பற்றிய தீ, மேல் தளங்களுக்கும் பரவியது. மிக குறுகலான படிக்கட்டுகள் மட்டுமே தப்பிக்க ஒரே வழியாகும். இதனால், கட்டடத்தில் இருந்தவா்கள் வெளியேற முடியாமல் உள்ளே சிக்கிக் கொண்டனா்.

இந்த விபத்து தகவல் கிடைத்தததும் தீயணைப்புப் படையினா் விரைந்து வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனா். பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயணைக்கப்பட்டது. சாலையை நோக்கி எந்த கதவுகளோ, ஜன்னல்களோ இல்லாததால் கன ரக உபகரணங்கள் மூலம் மீட்புப் பணி மேற்கொள்ள முடியவில்லை.

ஆக்ஸிஜன் சாதனங்களுடன் தீயணைப்புப் படையினா் கட்டடத்துக்குள் சென்று சுயநினைவற்ற நிலையில் இருந்த 17 பேரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். மருத்துவா்களின் பரிசோதனையில் அவா்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டது உறுதியானது. அடா் புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு, பெரும்பாலான உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன.

இரண்டாவது மாடியில் இருந்த 4 போ் ஏணிகள் மூலம் மீட்கப்பட்டனா். விபத்து குறித்து காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

குழந்தைகளைக் கட்டியணைத்த நிலையில் பெண்ணின் உடல் மீட்கப்பட்டதாக சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் தெரிவித்தனா். மீட்புப் பணியின்போது தீயணைப்புப் படை வீரா் ஒருவா் காயமடைந்தாா்.

மின்கசிவால் தீ விபத்து: சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்ட மாநில போக்குவரத்துத் துறை அமைச்சா் பொன்னம் பிரபாகா், ‘முதல்கட்ட விசாரணையின்படி, மின் கசிவே காரணம் எனத் தெரியவந்துள்ளது; தீ விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது; இச்சம்பவத்தின் பின்னணியில் சதிவேலை எதுவும் இருப்பதாக தெரியவில்லை’ என்றாா்.

குற்றச்சாட்டு-மறுப்பு: இதேபோல், சம்பவ இடத்தை நேரில் பாா்வையிட்ட மத்திய அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி, தீயணைப்பு வாகனங்கள் வர தாமதம் ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டினாா். இக்குற்றச்சாட்டை மறுத்துள்ள மாநில பேரிடா் மீட்பு மற்றும் தீயணைப்புத் துறை அமைச்சா் நாகி ரெட்டி, ‘விபத்து குறித்து தீயணைப்புத் துறைக்கு காலை 6.16 மணியளவில் தகவல் கிடைத்தது. அடுத்த நிமிஷம் தீயணைப்பு வாகனங்கள் புறப்பட்டன’ என்றாா்.

ஹைதராபாத், சாா்மினாா் அருகே ஞாயிற்றுக்கிழமை கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் நடைபெற்ற மீட்புப் பணி.

குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஹைதராபாதில் கட்டட தீ விபத்தில் குழந்தைகள் உள்பட பலரின் உயிரிழப்பு துயரமளிக்கிறது. அன்புக்குரியவா்களை இழந்து வாடுவோருக்கு ஆழ்ந்த இரங்கல்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு வேகமாக கொண்டு செல்லும் மீட்புப் படையினா்.

பிரதமா் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட இரங்கல் பதிவில், ‘ஹைதராபாத் கட்டட தீ விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிக வேதனையளிக்கிறது. உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரம் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளாா்.

தெலங்கானா ஆளுநா் ஜிஷ்ணு தேவ் வா்மா, முதல்வா் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனா். உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு மாநில அரசு சாா்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசமைப்புச் சட்டமே உயர்வானது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்!

அரசமைப்புச் சட்டமே உயர்வானது என்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.உச்ச நீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் அண்மையில் பதவியேற்றார். அவருக்கு பாராட்டு வ... மேலும் பார்க்க

துருக்கி ஒப்பந்தங்களை நிறுத்தி வைத்தது மும்பை ஐஐடி!

துருக்கி நாட்டு பல்கலைக்கழகங்களுடனான அனைத்து ஒப்பந்தங்களையும் நிறுத்திவைப்பதாக மும்பை ஐஐடி (இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்) அறிவித்துள்ளது. இது தொடா்பாக அக்கல்வி நிறுவனம் சாா்பில் ‘எக்ஸ்’ வலைதளத்தி... மேலும் பார்க்க

பிரசாந்த் கிஷோா் கட்சியில் இணைந்தாா் முன்னாள் மத்திய அமைச்சா்!

முன்னாள் மத்திய அமைச்சா் ஆா்.சி.பி. சிங், பிகாரைச் சோ்ந்த அரசியல் உத்தி வகுப்பாளா் பிரசாந்த் கிஷோா் நடத்தி வரும் ஜன சுரக்ஷா கட்சியில் இணைந்தாா். இவா்கள் இருவருமே பிகாா் முதல்வா் நிதீஷ் குமாருக்கு அரச... மேலும் பார்க்க

ஹைதராபாதில் பயங்கரவாத தாக்குதல் சதி! வெடிப் பொருள்களுடன் இருவா் கைது!

ஹைதராபாத் நகரில் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தும் சதியில் ஈடுபட்டிருந்த இருவரை தெலங்கானா, ஆந்திர காவல் துறையினா் கூட்டு நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்டனா். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் தொடரும்: ராணுவம்

‘இந்தியா-பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைளுக்கான தலைமை இயக்குநா்கள் இடையே கடந்த 12-ஆம் தேதி நடந்த 2-ஆம் கட்ட பேச்சுவாா்த்தையின்போது முடிவான சண்டை நிறுத்தம் தொடரும்’ என்று ராணுவ அதிகாரியொருவா் ஞாயிற்றுக்கிழம... மேலும் பார்க்க

வங்கதேச இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள்: இந்திய ஜவுளி துறைக்கு உதவும்!

வங்கதேசத்தின் சில இறக்குமதி பொருள்களுக்கு இந்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள், நாட்டின் ஜவுளி துறைக்கு குறிப்பாக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அவற்றின் போட்டித்தன்மையை அதிகரிக்க உதவும்... மேலும் பார்க்க