செய்திகள் :

Doctor Vikatan: உடல் முழுவதும் திடீரென அதிகமான அரிப்பு; தானாகச் சரியாகுமா, சிகிச்சை தேவையா?

post image

Doctor Vikatan: என் வயது 46. கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென உடல் முழுவதும் அரிப்பு வந்தது. இரண்டு, மூன்று நாள்களில் தானாக சரியாகிவிட்டது. இப்போது மீண்டும் ஒரு வாரமாக அதே போல உடல் முழுவதும் அரிக்கிறது. காரணம் தெரியவில்லை. இந்த முறையும் தானாகச் சரியாகும் என விடலாமா.... அல்லது அரிப்புக்கு சிகிச்சை அவசியமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த  கூந்தல் மற்றும் சரும சிகிச்சை மருத்துவர் தலத் சலீம்.

ட்ரைகாலஜிஸ்ட் தலத் சலீம்

அரிப்பில் இரண்டு வகை உண்டு. ஏதேனும் பூச்சி கடித்ததாலோ, செடிகள்மீது உரசியதாலோ, பூக்களின் மகரந்தத்தை சுவாசித்ததாலோ திடீர் அரிப்பு ஏற்படலாம். இது உடலின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் தீவிரமான அரிப்பை ஏற்படுத்தி, அந்தப் பகுதியை சிவந்துபோகச் செய்யும்.  இன்னொரு வகை அரிப்பில், உடல் முழுவதும் அரிப்பு இருக்கும்... அது இரவில் அதிகமாகும். சொரிந்தால் சுகமாக இருக்கும். லேசாக சொரிந்துவிட்டால், அரிப்பு இன்னும் அதிகமாகும். சொரிந்துவிட்ட இடங்களில் எரிச்சலும் சேர்ந்துகொள்ளும்.

உணவு, உபயோகிக்கும் பொருள்கள், உட்கொண்ட மருந்துகள் ஏற்படுத்திய ஒவ்வாமை, சூழல் என திடீர் அரிப்புக்கு பல காரணங்கள் இருக்கலாம். அரிப்பு மட்டுமன்றி, சிலருக்கு மூக்கில் நீர்வடிதல், மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலியும் வரலாம். ஒவ்வாமை என்பது பிறக்கும்போதே இருக்க வேண்டும் என அவசியமில்லை. எந்த வயதிலும், திடீரென ஏற்படலாம். ஒருவருக்கு திடீரென ஒரு விஷயம் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். அதைத் தெரிந்துகொண்டு தவிர்த்தாலே, திடீர் அரிப்பிலிருந்து விடுபடலாம். அலர்ஜிக்கான காரணம் அறிய இன்று பிரத்யேக பரிசோதனைகள் இருக்கின்றன.

அரிப்பு மட்டுமன்றி, சிலருக்கு மூக்கில் நீர்வடிதல், மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலியும் வரலாம்.

சருமத்துக்கு ஒவ்வாத ஏதோ ஓர் அந்நியப் பொருள் அதன்மீது படுவதன் விளைவாக, அரிப்பும் தடிப்பும் ஏற்படலாம். சருமத்தின் மேல் லேயரான எபிடெர்மிஸ் (Epidermis)மற்றும் அதற்கடுத்த லேயரான டெர்மிஸில் (Dermis) உள்ள திசுக்களில், இந்த பாதிப்பு தென்படும். இந்த வகை அலர்ஜியை ' கான்டாக்ட் டெர்மடைட்டிஸ்' (Contact dermatitis) என்கிறோம். டூ வீலர் ஓட்டும் சிலருக்கு, ஹேண்டில்பாரில் கைகள் பட்டுக்கொண்டே இருப்பதால், திடீரென கைகளில் அரிப்பு, சிவந்து போவது போன்றவை வரலாம்.   கவரிங் நகைகள் அணிவோருக்கும் வாட்ச் உபயோகிப்பவருக்கும்கூட இந்த வகை அரிப்பு வரலாம்.  நிக்கல், தங்கம், குரோமியம் உள்ளிட்ட உலோகங்களை எந்த வடிவத்தில் பயன்படுத்தினாலும் அது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி, அரிப்பை வரவழைக்கலாம்.  

சோப், மருந்துகள், அழகு சாதனங்கள், மருந்துகள், தூசு போன்றவற்றாலும் சிலருக்கு திடீர் அரிப்பு ஏற்படலாம். அது உடல் முழுவதுமோ அல்லது குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

அடிக்கடி திடீர் அரிப்பு ஏற்படும் பட்சத்தில், அது ஒவ்வாமை காரணமாக இருக்கும் என்று புரிந்துகொண்டு, உணவு டைரி ஒன்றில் குறித்து வரலாம். எந்த வேளை, எந்த உணவு சாப்பிட்டீர்கள், அதில் சேர்க்கப்பட்ட பொருள்கள் என எல்லாவற்றையும் குறித்துவைக்க வேண்டும்.  தொடர்ந்து ஒன்றிரண்டு வாரங்களுக்கு இப்படிச் செய்து வந்தால், அலர்ஜியை ஏற்படுத்திய பொருளை அடையாளம் காண்பது எளிதாக இருக்கும்.

அரிப்பு அதிகரிக்கும்போது கேலமைன் லோஷன் தடவலாம். அது அரிப்பை மட்டுப்படுத்தி, சருமத்தில் ஏற்பட்ட சிவந்த தடிப்புகளையும் சரி செய்யும்.

அரிப்பு அதிகரிக்கும்போது கேலமைன் லோஷன் தடவலாம். அது அரிப்பை மட்டுப்படுத்தி, சருமத்தில் ஏற்பட்ட சிவந்த தடிப்புகளையும் சரி செய்யும். அரிப்பு மட்டுமன்றி, அந்த இடத்திலிருந்து நீர், ரத்தம் கசிந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும்.

அலர்ஜி, அரிப்புக்கான மாத்திரைகளை நீங்களாக வாங்கிச் சாப்பிட வேண்டாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

Trump:``பாகிஸ்தான் மக்கள் புத்திசாலிகள்" - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகழாரம்! - காரணம் என்ன?

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதல் போக்கில் இருநாடுகளுடனும் வர்த்தகத்தை முன்வைத்து பிரச்சனையை தீர்த்து வைத்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட முக்கிய வர்த்தகக்... மேலும் பார்க்க

``20 வயதுள்ள 20 பெண்கள்; சார்களுக்கு இரையாக்க கொடூரப் பிடி..'' - திமுக அமைச்சர்களை சாடும் எடப்பாடி

ராணிப்பேட்டை, அரக்கோணத்தில் திமுக இளைஞரணி நிர்வாகி ஒருவர் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தற்போது தமிழ்நாட்டில் பரபரப்பை கிளப்பி உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் எ... மேலும் பார்க்க

``புற்றுநோயால் அவதிப்படும் ஜோ பைடன் நலம் பெற வேண்டுகிறோம்'' - ட்ரம்ப், கமலா ஹாரிஸ், ஒபாமா பதிவு

அமெரிக்கவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன். 1942-ம் ஆண்டு நவம்பர்-20 ல் பிறந்த இவருக்கு தற்போது வயது 82. இரண்டாவது முறையாக அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோதே மறதி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் சிக்கல்கள... மேலும் பார்க்க

உலகிலேயே அதிக மழை பெய்யும் சிரபுஞ்சி, மாவ்சின்ராமில் தண்ணீர் பஞ்சம் வர என்ன காரணம்?

சில நாள்களுக்கு முன்பு, மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக்கில் உள்ள கிராமம் ஒன்றில், பெண்கள் கிணற்றுக்குள் இறங்கி தண்ணீர் எடுக்கும் வீடியோ வைரலானது. அந்தக் கிணற்றுக்குள்ளும் 'ஆஹா... ஓஹோ' என்று தண்ணீர் இரு... மேலும் பார்க்க