செய்திகள் :

ராகவேந்திர சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்!

post image

பழமை வாய்ந்த ராகவேந்திர சுவாமி கோயில் கும்பாபிஷேகம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

கோவை மாநகரத்திலுள்ள சலிவன் வீதியில், 160 வருடம் பழமைவாய்ந்த, அபய பிரத யோக யோக ஆஞ்சநேயர் ராகவேந்திர சுவாமி மிருத்திகா பிருந்தாவனம் அமைந்துள்ளது. இந்த கோயிலானது ராகவேந்திரா சுவாமிக்காக, கோவை மாவட்டத்தில் கட்டப்பட்ட முதல் சன்னதியும், தமிழகத்தில் இரண்டாவதாகவும் அமைந்துள்ளது.

ஸ்ரீ ராகவேந்திர சுவாமியுடன் யோக ஆஞ்சநேயரும் அருள்பாலிக்கும் இக்கோயில் மிகவும் புகழ்பெற்ற ஸ்தலமாகும். இங்கு, ஆஞ்சநேயர், சங்கு சக்கரம் தாங்கிய நிலையில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். கோவையின் மந்த்ராலயம் என்றழைக்கப்படும் இக்கோயிலின் புனரமைப்பு பணிகள் கடந்த 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்று வந்தன.

திருப்பணிகள் நிறைவுற்ற நிலையில், இன்று காலை 6.30 மணியளவில் , உடுப்பி பலிமார் மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ வித்யாதீர்த்த ஸ்ரீப்பாத சுவாமிகள், இளைய பட்டம் ஸ்ரீ ஸ்ரீ வித்யா ராஜேஸ்வர தீர்த்த ஸ்ரீப்பாத சுவாமிகள் தலைமையில், திருவோண நட்சத்திரத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிசேஷக விழா நடைபெற்றது.

இவ்விழாவை நிர்வாக அறங்காவலர் ரங்கநாதன் முன்னின்று நடத்தினார். விழாவில் அறங்காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு யோக ஆஞ்சநேயர் மற்றும் ராகவேந்திர சுவாமிகளை வழிபட்டனர். 48 நாள்களுக்கு யாக சாலையில் தொடர்ந்து பூஜைகள் நடக்க இருக்கிறது.

தக் லைஃப் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்! கால அளவு என்ன?

தக் லைஃப் திரைப்படத்தின் சென்சார் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் கமல்ஹாசன் - இயக்குநர் மணிரத்னம் கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் டிரைலர் ... மேலும் பார்க்க

கில் ரீமேக்கில் துருவ் விக்ரம்?

ஹிந்தியில் வெளியாகி மிகப்பெரிய கவனம்பெற்ற கில் படத்தின் தமிழ் ரீமேக்கில் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஹிந்தியில் கரண் ஜோஹர் தயாரிப்பில் நிகில் நாகேஷ் பட் இயக்கத்தில் கடந்த 2... மேலும் பார்க்க

800 நாள்களை நிறைவு செய்த மதிய நேரத் தொடர்!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மதிய நேரத் தொடர் 800 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகிவருகிறது. சாம்பவி குருமூர்த்தி மற்றும் நந்தன் லோகநாதன் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இலக்கியா தொடர், 800 நாள்க... மேலும் பார்க்க

மனசெல்லாம் தொடரில் இருந்து விலகிய நாயகன்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மனசெல்லாம் தொடரில் இருந்து நடிகர் ஜெய்பாலா விலகியுள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற தொடர்களில் ஒன்றான மனசெல்லாம் தொடரில் இ... மேலும் பார்க்க

சினிமாவில் 30 ஆண்டுகளை நிறைவு செய்த சுந்தர். சி!

இயக்குநர், நடிகர் சுந்தர். சி திரைத்துறையில் 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் சுந்தர். சி. மணிவண்ணன் இயக்கிய வாழ்க்கைச் சக்கரம் திரைப்படத்தில் கா... மேலும் பார்க்க

மாமன் நீக்கப்பட்ட காட்சி வெளியீடு!

மாமன் திரைப்படத்தின் நீக்கப்பட்ட காட்சி வெளியிடப்பட்டுள்ளது.இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் மாமன். அக்கா - தம்பி தாம் மாமன் உறவ... மேலும் பார்க்க