டி20 போட்டிகளில் விராட் கோலியின் சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்!
'எவ்வளவு செலவானாலும் மனிதர்கள் தான் வேலைக்கு வேண்டும்' AI க்கு Bye சொல்லும் ஸ்வீடன் நிறுவனம்
'ஏ.ஐ -யை எங்கள் நிறுவனத்தின் பணிகளுக்குப் பயன்படுத்தப் போகிறோம். இதன் மூலம், சில வேலைகளை எளிதாக்கப் போகிறோம்' என்று பல முன்னணி நிறுவனங்கள் கூறிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், ஒரு நிறுவனம் இதற்கு தலைகீழான முடிவை எடுத்துள்ளது.
அதாவது, அந்த நிறுவனம் ஏ.ஐ-யில் இருந்து மனிதர்களுக்கு மாறியிருக்கிறது.
ஸ்வீடனைச் சேர்ந்த கிளார்னா நிறுவனம் நிதி சார்ந்த நிறுவனம். கடன் வழங்கும் இந்த நிறுவனத்தில் 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கிட்டத்தட்ட 5,500 முழுநேர பணியாளர்கள் பணியாற்றி வந்தனர்.

2023-ம் ஆண்டு முதல் பணியாளர்களை வேலைக்கு எடுப்பதை நிறுத்திய, இந்த நிறுவனம் ஏ.ஐ பக்கம் சாயத் தொடங்கியது. இதன் விளைவாக, கடந்த ஆண்டின் இறுதியில், இந்த நிறுவனத்தின் பணியாளர்களின் எண்ணிக்கை சுமார் 3,400.
மொழிபெயர்ப்பு, தரவு பகுப்பாய்வு, மார்க்கெட்டிங் போன்றவற்றிற்கு ஏ.ஐயை பயன்படுத்தியதால், இந்த நிறுவனம் 10 மில்லியன் டாலர்களைச் சேமித்திருக்கிறது. 700 வாடிக்கையாளர் சேவை ஏஜென்டுகள் செய்யும் வேலையை ஏ.ஐ செய்து வந்துள்ளது.
இது குறித்து கடந்த டிசம்பர் மாதம், 'மனிதன் செய்யக்கூடிய வேலைகளை ஏ.ஐயை செய்கிறது' என்று அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி செபாஸ்டியன் சீமியாட்கோவ்ஸ்கி கூறியிருந்தார்.
ஆனால், இப்போது அவரே, 'ஏ.ஐ செய்யும் வேலை அவ்வளவு தரமானதாக இல்லை. என்ன இருந்தாலும், நிறுவனத்திற்குள் மனிதர்கள் இருக்க வேண்டும்.
பிசினஸ், பிராண்டிங் என எந்தக் கோணத்தில் எடுத்துக்கொண்டாலும், வாடிக்கையாளர்களுக்கு உதவ எப்போதும் நிறுவனத்தில் ஒரு மனிதர் இருக்கிறார் என்பது அவர்களுக்குத் தெரிய வேண்டும்.
ஏ.ஐ பயன்பாட்டால் செலவும் குறைகிறது... தரமும் குறைகிறது' என்று கூறியுள்ளார்.